“சூரியகுமார் செய்வதை நான் கனவில் கூட செய்ய நினைக்க மாட்டேன் ” – கிளன் பிலிப்ஸ் வியப்பு!

0
2631
Phillips

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணி உடன் தோல்வியைத் தழுவி அரையிறுதியோடு வெளியேறி இருந்தது!

இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் மிகவும் அபாரமாக செயல்பட்டு இருந்தார்கள். விராட் கோலிக்கு அடுத்து சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் இடத்தில் இருந்தார்!

இந்தத் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்று இருக்கிறார். ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவன் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார் என்பது முக்கியமானது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி முகமது சமி ஆகியோர் இடம்பெறவில்லை!

இந்தச் சுற்றுப்பயணத்தில் டி20 போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் மழையால் ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நாளை இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளன் பிலிப்ஸ் பேசுகையில் ” சூரியகுமார் முற்றிலும் நம்ப முடியாதவர். அவர் செய்யும் காரியங்களை நான் கனவில் கூட செய்ய நினைக்க மாட்டேன். ஆனால் தற்போது நான் முயற்சி செய்கிறேன். எங்களிடமும் சில வித்தியாசமான விளையாட்டு முறைகள் உள்ளது. அடிக்கவே முடியாத பகுதிகளில் சிக்ஸர் அடிக்கும் அவரது மணிக்கட்டு வலிமை நீங்கள் அரிதாகவே பார்க்கும் ஒரு திறமை” என்று கூறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில் ” சூரிய குமாரின் ஸ்ட்ரைக் ரேட் ஆஸ்திரேலியாவில் இருந்ததைவிட இங்கு அதிகமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்குள்ள ஆடுகளங்களும் அங்கிருந்தது போலத்தான் ஆனால் இங்கு மைதானங்கள் சிறியவை. இந்த தொடரில் அவரது பேட்டிங் மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என்பது உறுதி” என்று தெரிவித்திருக்கிறார்.