எதையுமே நம்ப முடியல ! எல்லாமே கனவு மாறி இருக்கு – மனம் திறந்த இந்திய கிரிக்கெட் வீரர்!

0
175
surya kumar yadhav

இந்திய மற்றும் இலங்கை  அணிகளுக்கிடையேயான  டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடருக்கு  இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது . இதில் டி20 அணியின்  தலைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த கேஎல ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் துணை  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஓராண்டுகளாகவே இந்தியா அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில்  மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர்  சூர்ய குமார் யாதவ். இவர் தான்  டி20 கிரிக்கெட்டில்  ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்கள் கடந்த இந்திய வீரர் ஆவார். இந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும்  31 டி20 போட்டிகளில் ஆடி உள்ள இவர்  1164 ரன்களை சேர்த்துள்ளார் . இவரது சராசரி 46.56  ஆகும் . இதில் இரண்டு சதங்களும் அடங்கும் .

- Advertisement -

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சிப் போட்டிகளிலும்  மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்  முதல் டி20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில்  தான் இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி  டைம்ஸ் ஆப்  இந்தியா  நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில்  “என் வாழ்நாளில் இதுவரை நடந்ததெல்லாம்  ஒரு கனவு போலவே இருக்கிறது . இந்திய அணிக்காக ஆடியது  ஐசிசி டி20 தரவரிசையில்  முதலிடத்திற்கு வந்தது  மற்றும் தற்போது இந்திய அணியின் டி20 போட்டிகளுக்காக   துணை கேப்டனாக  இருப்பது என  எல்லாமே ஒரு கனவு போல இருக்கிறது . கண்ணை மூடிக் கொண்டு என்னிடமே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்  இது கனவா இல்லை நிஜமா என்று  மேலும் இது மகிழ்ச்சியான ஒரு தருணம்” என்று கூறினார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர்  “இந்த செய்தியை என் தந்தை தான் என்னிடம் முதல் முதலில் தெரிவித்தார் . என் தந்தை எப்பொழுதுமே சமூக வலைதளங்களில்  ஆக்டிவாக இருப்பார் . அதனால் பிசிசிஐ  இலங்கை தொடருக்கான இந்திய அணியை அறிவித்ததும்  அந்த இணைப்பை எனக்கு  வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார் . அதனுடன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால் எந்த ஒரு அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாதே  எப்போதும் போல உன்னுடைய பேட்டிங்கை  ரசித்து விளையாடு  என்ற செய்தியுடன் எனக்கு அதை அனுப்பினார் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சிப் போட்டிகளில்  மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ்  சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில்  95 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் ஆடிய இரண்டு போட்டிகளிலுமே  மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு முன் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 90களில் ஆட்டம்  இழந்தார் . இந்த வருடத்தின் சர்வதேச டி20 போட்டிகளில்  அதிக ரன்களை குவித்த வீரர்  சூரியகுமார் யாதவ் தான் . இந்த வருடம் அவருக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது .