” ரோஹித் ஷர்மா & ராகுலை வெளியேற சொல்லிவிட்டு நான் அவர்கள் இடத்திற்கு செல்ல முடியாது ; காரணம் இதுதான் ” – இஷான் கிஷன் செய்தியாளர்களுக்கு அதிரடி பதில்

0
123
Rohit Sharma KL Rahul and Ishan Kishan

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போனவர் இஷான் கிஷன். விலை 15.25 கோடி. வாங்கிய அணி மும்பை இன்டியன்ஸ். ஆனால் இவ்வளவு விலைக்கொடுத்து வாங்கப்பட்ட இஷான் கிஷான் ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுதோடு சரி அதற்குப் பிறகு தொடர்ந்து சொதப்பி, மும்பை அணி ப்ளேஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறிய பின்னர்தான் ரன்கள் அடித்தார். இந்த ஐ.பி.எல் தொடரில் இவர் 13 ஆட்டங்களில் 30.82 ரன் சராசரியோடு 370 ரன்கள் அடித்திருந்தார்!

இவரது பேட்டிங் பார்ம் சரியாக இல்லாத போதும் கூட, மிகச்சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவானுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இவருக்கு தென் ஆப்பிரிக்க தொடருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

அதேசமயத்தில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்க, அவரோடு துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கப் போவது ருதுராஜா இல்லை கிஷான் கிஷானா என்ற விவாதம் இருந்து வந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கேப்டன் கே.எல்.ராகுல் காயம்பட்டு தொடரைவிட்டு வெளியேற, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷான் ருதுராஜ் என்று முடிவானது.

நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷான் ருதுராஜ் ஜோடி பவர்ப்ளேவில் 51 ரன் குவித்து அசத்தியது. பந்து கணிக்க முடியாத அளவு இருந்த கடினமான டெல்லி ஆடுகளத்தில் இஷான் கிஷான் சமாளித்து நின்று 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்து வாய்ப்பளித்தது தவறில்லை என்று நிரூபித்தார்.

இது சம்பந்தமாக பேசியுள்ள அவர் “அவர்களுக்குப் பதிலாக எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று அவர்களிடமே கேட்க முடியாது. அவர்கள் இந்திய அணிக்காக நிறைய ரன்களை குவித்திருக்கும் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள். நான் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஆடும் வாய்ப்பு கிடைத்தால் என் திறமையை நிரூபிக்க வேண்டும். இதுதான் நான் செய்யவேண்டிய முக்கிய விசயம்” என்று கூறினார்!