லியாம் லிவிங்ஸ்டன் அடித்த 117 மீட்டர் சிக்ஸரை விட நான் தூரமாக அடித்துக் காட்டுவேன் – சவால் விட்டுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்

0
148
Liam Livingstone 117M Six

ஐபிஎல் தொடரில் பல சாதனை பட்டியல் இருக்கின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட சாதனை அதிக தூரத்திற்கு சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக தூரமான சிக்சர் அடித்த வீரர் ஆல்பி மோர்கல் தான். சென்னை அணியில் விளையாடிய போது அவர் 125 மீட்டர் சிக்சர் அடித்தார்.

சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. அப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அப்போட்டியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் லியம் லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 30* ரன்கள் குவித்தார்.

முகமது ஷமி வீசிய ஓவரில் அவர் 117 மீட்டர் தூர சிக்சர் அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் நீண்ட தூர சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். அவர் அடித்த அந்த நெடுந்தூர சிக்சர் வீடியோ தற்போது வரை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

130 மீட்டருக்கு நான் சிக்சர் அடிப்பேன்

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ரோவ்மன் போவல் டெல்லி அணியில் தற்போது விளையாடி வருகிறார். 10 போட்டிகளில் விளையாடி 202 ரன்கள் அவர் தற்போது வரை குறித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 171.19 மற்றும் ஆவெரேஜ் 28.86 ஆக உள்ளது.

கிறிஸ் கெயில் கீரோன் பொல்லார்ட் மற்றும் ஆண்ட்ரூ ரசல் போல அதிரடியாக விளையாடும் ஆற்றல் இவரிடம் உள்ளது. அவர்களைப் போலவே இவரும் அதிரடியான சிக்சர்கள் அடிப்பார்.

சமீபத்தில் பேசியுள்ள அவர், “லியம் லிவிங்ஸ்டன் அடித்த தூரத்துக்கு என்னால் சிக்சர் அடிக்க முடியும். நான் மந்தீப் சிங்கிடம் இது சம்பந்தமாக பேசினேன். கூடிய விரைவில் 130 மீட்டர் தூரத்தில் நான் சிக்சர் அடிப்பேன். அது எப்படி நடக்கப் போகிறது என்று பார்ப்போம்”, என்று ரோவ்மன் போவல் தற்பொழுது கூறியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் நெடுந்தூர சிக்சர் அடித்த வீரர்கள் :
  1. ஆல்பி மோர்கல் – 125 மீட்டர்
  2. பிரவீன் குமார் – 124 மீட்டர்
  3. ஆடம் கில்கிறிஸ்ட் – 122 மீட்டர்
  4. ராபின் உத்தப்பா – 120 மீட்டர்
  5. கிறிஸ் கெய்ல் – 119 மீட்டர்
  6. யுவராஜ் சிங் – 119 மீட்டர்
  7. ராஸ் டெய்லர் – 119 மீட்டர்
  8. லிவிங்ஸ்டோன் – 117 மீட்டர்*
  9. கம்பீர் – 117 மீட்டர்
  10. கட்டிங் – 117 மீட்டர்