என்னால் வருங்காலத்தில் இதை நிச்சயமாக செய்ய முடியும் ; நான் பெருமைக்காக சொல்லவில்லை – இளம் வீரர் ரியான் பராக்

0
79
Riyan Parag RR

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் என்றால்; ஒன்று, சென்னை, மும்பை அணிகள் புள்ளி பட்டியலில் கீழே இருப்பது. மற்றொன்று, ராஜஸ்தான், குஜராத் அணிகள் ஆறு புள்ளிகளோடு புள்ளி பட்டியலில் கம்பீரமாய் இருப்பது.

இன்று இந்த ராஜஸ்தான் குஜராத் அணிகள், டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் வெல்பவர்களுக்குப் புள்ளி பட்டியலில் முதலிடம் உறுதி!

- Advertisement -

நடந்து முடிந்த மெகா ஏலத்தின் போது, சங்கக்காரா தலைமைப்பயிற்சியாளராய் உள்ள ராஜஸ்தான் அணியின் மீது, போல்ட், பிரசித், அஷ்வின், சாஹல் என்று பந்துவீச்சில் அணியை பலமாகக் கட்டினாலும், பேட்டிங் டெப்த் உள்ள அணியைக் கட்ட தவறிவிட்டதாக ஒரு விமர்சனம் இருந்தது.

இந்த நிலையில் ஏலத்திலிருந்து மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு வாங்கப்பட்ட ரியான் பராக் சில விசயங்களைப் பகிர்ந்துள்ளார் “வரும் ஆண்டுகளில் இந்திய அணிக்குச் சிறந்த பினிசராக இருக்க முடியுமென்று உணர்கிறேன். இது என்னைக் குறித்து நானே பெருமையாய் சொல்லிக் கொள்வதில்லை. என்னால் ஒரு ஆல்ரவுண்டராக, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட முடியுமென்றும் நம்புகிறேன். அதற்கான திறமை என்னிடம் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்!