எனக்கு 200 அடிக்கணும்னு எண்ணமே இல்லை, விராட் கோலி தான் என்னை கன்ட்ரோல் பண்ணினாரு – இஷான் கிஷன் பேட்டி!

0
1846

விராட் கோலி கண்ட்ரோல் பண்ணவில்லை என்றால், இந்த 200 வந்திருக்காது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் இஷான் கிஷன்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இளம் துவக்க வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

இவருக்கு பக்கபலமாக இருந்து விராட் கோலி தனது 72 ஆவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்கள் கடந்தது. இஷான் 210(131) ரன்கள் மற்றும் விராட் கோலி 113(91) ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் அடித்திருந்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு எதிர்பார்த்ததைப் போல பேட்டிங் அமையவில்லை. 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.

இரட்டை சதம் அடித்த ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேசுகையில், “நான் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததை இரட்டை சதம் அடித்ததை விட பெருமிதமாக கருதுகிறேன். 180 ரன்கள் கடந்த பிறகு விராட் கோலி இடம் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். “என்னை கண்ட்ரோல் செய்யுங்கள், அவ்வபோது சிங்கிள் எடுக்க வேண்டும் என்று எனக்கு கூறிக்கொண்டே இருங்கள். இல்லையென்றால் நான் இறங்கி அடிக்க நினைத்து ஆட்டம் இழக்க நேரிடலாம். இது எனக்கு மிகவும் முக்கியமானது.” என்று சொன்ன பிறகு, அவரும் என்னை வலியுறுத்தி கொண்டே இருந்தார்.

- Advertisement -

“இதை அடிக்க வேண்டாம் சிங்கிள் எடுத்துக் கொள். இந்த பந்தை அடித்துக்கொள்.” என்று அறிவுறுத்திக் கொண்டே இருந்தார். அதன்படி எல்லாம் நன்றாக அமைந்தது. 200 ரன்களை கடந்த பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. அதை 300 ரன்கள் ஆக மாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனாலும் இரட்டை சதம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.