” சதம் அடிக்க வார்னருக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறினேன் ” ; அதற்கு வார்னர் அளித்த பதில் இதுதான் – ரோவ்மன் போவல்

0
8219
Rovman Powell and David Warner

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 50வது போட்டியில், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் தற்போது மோதி வருகின்றன. ஒன்பது ஆட்டங்களில் விளையாடி இருக்கும் ஹைதராபாத் அணி, ஐந்து ஆட்டங்களில் வென்று, பத்துப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. ஒன்பது ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டெல்லி அணி, நான்கு ஆட்டத்தில் வென்று, எட்டுப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் வெளியே போக, ஸ்ரேயாஷ் கோபால், சீன் அபோட் உள்ளே வந்திருக்கிறார்கள். டெல்லி அணியில் பிரித்வி ஷா, சேத்தன் சர்காரியா, அக்சர் படேல் வெளியே போக, மன்தீப் சிங், ஆன்ட்ரிச் நோர்க்யா, ரிபல் படேல் உள்ளே வந்திருந்தனர்.

- Advertisement -

டாஸில் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, டெல்லி அணியின் பேட்டிங்கை துவங்க வந்த மன்தீப் சிங் ரன் இல்லாமல் வெளியேற, அடுத்து வந்த மிட்செல் மார்ஷூம் 10 ரன்களில் நடையைக்கட்டினார். ஆனால் அதற்கடுத்து இணைந்து டேவிட் வார்னரும், ரோமன் பவெலும் சேர்ந்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை ஒட்டுமொத்தமாகச் சிதறடித்துவிட்டனர். இருவரும் அபாரமாய் அரைசதமடிக்க, இருபது ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 207 ரன்களை குவித்தது.

19வது ஓவரின் முடிவில் 92 ரன்களோடு சதத்திற்கு நெருக்கமாய் டேவிட் வார்னர் இருக்க, 20வது ஓவரை முழுக்க ரோமன் பவலே விளையாடிவிட்டார். இதுக்குறித்துப் பேசியுள்ள ரோமன் பவெல் “நான் இருபதாவது ஓவர் துவங்குவற்கு முன் வார்னரிடம் ‘நான் சிங்கிள் அடித்துத் தருகிறேன், நீங்கள் சதத்தை அடியுங்கள்’ என்றேன். அதற்கு அவர் ‘ஹே மேன் நான் இப்படியான கிரிக்கெட்டை விளையாடவில்லை. நீ எவ்வளவு கடினமாக அடிக்க முடியுமோ அடித்து நொறுக்கு’ என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்!