நான் புவனேஷ்வர் குமாரிடம் உங்கள் குறிக்கோள் என்னவென்று கேட்டேன் ; அதற்கு அவர் கூறிய பதில் இதுதான் – டேல் ஸ்டெய்ன்

0
748
Bhuvaneshwar Kumar and Dale Steyn

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய புவனேஸ்வர் குமார் 14 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆரம்பத்தில் அவருடைய ஆட்டம் சுமாராக இருந்தாலும் அதன் பின்னர் தன்னுடைய ஆட்டத்தை படிப்படியாக மெருகேற்றி கொண்டு சென்றார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பவுலிங் எக்கானமி 7.34 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான டேல் ஸ்டைன் தான் புவனேஸ்வர் குமாரிடம் ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் அளித்த பதில் தன்னை வியப்படைய செய்ததாகவும் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

புவனேஸ்வர் குமார் எனக்கு கொடுத்த பதில்

பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் அவரிடம் சென்று உங்களுக்கு கனவு அல்லது லட்சியம் ஏதேனும் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் நான் மீண்டும் பர்ப்பில் நிற தொப்பியை கைப்பற்ற வேண்டும் என்று பதிலளித்தார்.

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் பந்துவீச்சாளருக்கு இந்த தொப்பி வழங்கப்படும். ஐபிஎல் தொடரில் இதற்கு முன் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு என தொடர்ச்சியாக இரு ஆண்டுகள் அவர் இந்தத் தொப்பியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர் குமார் குறித்து பெருமையாக பேசிய டேல் ஸ்டெயின்

இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அவரும் ஒருவர். அவ்வளவு எளிதில் அவரை நாம் வெளியே உட்கார வைக்க முடியாது. அவரிடம் நிறைய திறமைகள் மற்றும் வியப்படையச் செய்யும் விஷயங்கள் நிறைந்துள்ளது. யாரிடமும் சொல்லாத ஒரு சில கனவுகளும் அவருக்குள் உள்ளது.

நிச்சயமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார். ஆஸ்திரேலியாவில் அவர் எவ்வாறு விளையாடுவார் என்பதற்கு எந்தவித அறிமுகமும் தேவையில்லை. எப்பொழுது பயிற்சி எடுக்க வேண்டும் எப்பொழுது எந்த நேரத்தில் எந்த விதத்தில் விளையாட வேண்டும் என்கிற அனைத்து விஷயத்திலும் நன்கு தேர்ச்சி பெற்ற வேகப்பந்து வீச்சாளர் அவர்.

ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹர் மற்றும் ஹார்ஷால் பட்டேல் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் நிச்சயமாக அவர் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டராக அவர் இருக்கப் போகிறார் என்றும் டேல் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.