“இங்கிலாந்த பாராட்டுறேன்.. ஆனா நான் இருக்கேன் என்னை மீறி பண்ணட்டும்” – பும்ரா சவால்

0
243
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் டெஸ்ட் தொடர் பல வகைகளில் சுவாரசியத்தை ரசிகர்களுக்கு கூட்டக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

ஆனாலும் கூட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையும், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு தாக்குதலும்தான் பெரிய விஷயமாக பேசப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பற்றியோ, இது அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் பற்றியோ எந்த விதமான பேச்சுகளும் முன்னாள் வீரர்களிடமும் பெரிய அளவில் இல்லை. தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்த அளவில் மட்டுமே பேச்சுகள் இருக்கின்றன.

இங்கிலாந்து தரப்பில் எடுத்துக் கொண்டால் பந்து தேய்ந்த பிறகு ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் சிறந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். மேலும் புதிய பந்திலும் ஸ்விங் செய்யக்கூடியவர். இவரோடு சேர்ந்து டைட் லைன் லென்தில் தொடர்ந்து வீசக்கூடிய ராபின்சன் இருக்கிறார்.

இதேபோல் இந்திய தரப்பில் எடுத்துக் கொண்டால் யார்க்கரை கூட விட்டு வைக்காத ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். கூடவே வாபுல் சீமில் அசத்தக்கூடிய முகமது சிராஜ் இருக்கிறார். இவர்களும் போட்டிக்குள் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறும் பொழுது ” அவர்கள் விளையாடும் பாஸ்பால் என்ற வார்த்தையில் எனக்கு தொடர்பு கிடையாது. அவர்கள் அதன் மூலம் வெற்றிகரமான கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மேலும் ஆக்ரோஷமான முறையில் விளையாடுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மற்றொரு வழி இருக்கிறது என உலகத்திற்கு காட்டுகிறார்கள்.

ஆனால் அவர்கள் இப்படி ஆக்ரோஷமாக விளையாடுவது ஒரு பந்துவீச்சாளராக எனக்கு வாய்ப்பு அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் எப்பொழுதுமே எனக்கு என்ன சாதகம் இருக்கிறது என்று மட்டும் பார்ப்பேன். அவர்கள் அடித்து விளையாட சென்றால் என்னால் விக்கட்டுகளை குவிக்க முடியும்.அவர்கள் விளையாடும் முறைக்கு பாராட்டுகிறேன், ஆனால் ஒரு பந்துவீச்சாளராக நானும் போட்டியில் இருக்கிறேன்” என்று சவாலாகக் கூறியிருக்கிறார்.