நான் தோனி, டிராவிட்டை விட வித்தியாசமான கிரிக்கெட் வீரர் – விளக்கம் அளிக்கும் சஞ்சு சாம்சன்

0
43
MS Dhoni and Sanju Samson

2022 ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதி குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது சில விசயங்களோடு தற்செயலாய் ஒத்துப்போவதாய் உள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் யாரின் எதிர்ப்பார்ப்பிலும் இல்லாத ஒரு புதிய அணியாக குஜராத் அணி இருந்து கோப்பையை எப்படி வென்றதோ, அதேபோல்தான் இந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியோடு இறுதிபோட்டியில் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2008 முதல் ஐ.பி.எல் தொடரில் ஷேன் வார்ன் கோப்பையைக் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தியது.

ஐ.பி.எல் தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இந்த ஐ.பி.எல் தொடரில்தான் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிபோட்டியில் நுழைந்திருந்தது. கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் கூட ஐ.பி.எல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்கு இது சிறப்பான சீசனாகத்தான் அமைந்திருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2008-2011 ஆண்டுகளில் ஷேன் வார்னே வழிநடத்தினார். இவருக்குப் பிறகு ராகுல் டிராவிட்டு அடுத்த இரு சீசன்களில் வழிநடத்தினார். அடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தும், நடுவில் அஜிங்யா ரகானேவும் ராஜஸ்தான் அணியை வழிநடத்த, கடந்த வருடம் ராஜஸ்தான் அணிக்கு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஐ.பி.எல்-ல் முதல் முறையாக 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சனின் திறமையை ராகுல் டிராவிட் அப்போதே உணர்ந்திருந்தார். நடுவில் 2016-17 வருடங்களில் டெல்லி அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன் மீண்டும் 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்குத் திரும்பி, கடந்த வருடம் கேப்டனும் ஆக்கப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்டின் பார்வை பட்டிருந்த சஞ்சு சாம்சன், அவர் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அவரின் பயிற்சியின் கீழ் விளையாடி நம்பிக்கையைப் பெற்றிருந்தார். அதே சமயத்தில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் கேப்டன் பொறுப்பை ஏற்ற சஞ்சு சாம்சன் அப்போது “நான் தோனி அல்லது டிராவிட்டில் இருந்து நான் வித்தியாசமானவன். நான் என் இயல்பிலேயே தொடர விரும்புகிறேன். முதலில் அணியின் மனநிலையை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எல்லா வீரர்களும் தங்களின் சிறந்ததையே கொடுக்க வந்திருக்கிறார்கள். எனவே அவர்களிடம் தொடர்ந்து இதுபற்றி பேசிக்கொண்டிருப்பது முட்டாள்தனம்” என்று கூறியிருந்தார்.

தற்போது ராகுல் டிராவிட் பற்றி சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “அவரது பேச்சுக்கள் ஆழமானவை. அவரது வார்த்தைகள் நம்மை நீண்ட நேரம் கவனம் ஈர்க்கும் வகையில் ஹிப்னாடிசம் போல் இருக்கும். ஆனால் அவர் பேசுவதைப்போலவே நம்மை அக்கறையுடன் புரிந்துகொள்ளவும் செய்வார். அவர் எங்களை நேசித்தார். இதுதான் எங்களின் சிறந்ததைத் தர எங்களைத் தூண்டியது. இந்த சூழலைத்தான் நாங்கள் ராஜஸ்தான் அணியிலும் உருவாக்க முயற்சி செய்கிறோம்” என்று கூறினார்!