இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்க ஓய்வு பெற வேண்டிய அவசியம் இல்லை – ஆஸ்திரேலிய கேப்டன் வியப்புப் பேச்சு!

0
10895
Finch

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போன் மைதானத்தில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகம் கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த போட்டி ஒன்று நடைபெற்று முடிந்திருந்தது!

இந்த போட்டி முடிந்து ஏறத்தாழ ஒரு வாரம் கடந்தும் கூட இந்த போட்டி பற்றிய பேச்சுகள் குறையவில்லை. இந்தியாவில் சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்கிரமித்து இருப்பது இந்த போட்டி பற்றியும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலியை பற்றியும்தான் அதிக செய்திகள் இருக்கிறது.

- Advertisement -

இந்தியா இரண்டாவது பேட் செய்கையில் 160 ரகளை நோக்கி சென்றது. ஆனால் 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. பத்து ஓவரில் 45 ரன்களை மட்டுமே நான்கு விக்கெட் கிளப்பிற்கு எடுத்து இருந்தது. இதற்கு அடுத்து விராட் கோலி ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து 113 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். கடைசி ஓவரில் ஒரு ஆட்டத்தில் என்னென்ன நடக்குமோ அது அத்தனையும் அந்த ஓவரில் நடக்க அந்த போட்டி இந்தியா பக்கம் வெற்றிகரமாக முடிந்தது.

இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேசுகையில் ” இந்த ஆட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும் சரி, இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் உண்மையில் வீட்டில் உட்கார்ந்து பதட்டமாக பார்த்தேன். அதை நான் பார்க்கும் பொழுது பதட்டமாக இருந்தேன். ஏனென்றால் அது எவ்வளவு பெரிய மோதல் என்று எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட ஒரு போட்டியை காண நான் ஓய்வு பெற வேண்டிய தேவையில்லை. நேரலையில் வீட்டிலிருந்தபடி பார்க்க முடியும் ” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அந்த ஆட்டம் விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸ். ஆட்டத்தின் கடைசி மூன்று ஓவர்கள் முடிய அங்கு நீங்கள் நின்று இருந்தால், அந்த அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். விராட் கோலி மொத்த அழுத்தத்தையும் எதிரணி மேல் போட்டார். அதைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த ஒன்றாக இருந்தது ” என்று புகழ்ந்து கூறியுள்ளார்!

- Advertisement -