“ஒத்துக்குறேன்.. இந்திய ஸ்பின்னர்கள் எங்கள அழிக்க போறாங்க!” – இங்கிலாந்து வாகன் ஆச்சரிய பேச்சு!

0
195
Vaughan

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு பெரிய நாடுகள் டெஸ்ட் தொடரில் விளையாடுவது என்பது எப்பொழுதும் அதிக சுவாரசியத்தை உண்டு செய்யக்கூடியது.

மேலும் தற்பொழுது இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட்டை அணுகுவது போல அதிரடியாக அணுகி வெற்றி பெற்று வருகிறது. இவர்களின் தாக்குதல் பாணி அணுகுமுறைக்கு உலகெங்கும் இருந்து தனி ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடமான இந்தியாவில், இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்த்து என்ன முறையில் விளையாடுவார்கள்? தாக்குதல் பாணியில் விளையாடினால் சாதிக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.

இந்தியா இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணியால் இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

தற்பொழுது இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இறுதியில் உலகில் விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம் இந்தியாவாகும். நீங்கள் திரும்பி ஆசஸ் தொடரை பார்த்தால் அங்கு நாதன் லயன் சிறப்பாக பந்து வீசிய பொழுது, ஆஸ்திரேலியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என வலுவாக இருந்தது.

- Advertisement -

அப்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் ஒரு ஸ்பின்னரை மட்டுமே எதிர்கொண்டு விளையாடினார்கள். மேலும் சில அபத்தமான ஷாட்களை விளையாடி விக்கெட்டுகளை கொடுத்தார்கள்.

இந்தியாவில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் சேர்ந்தால், இங்கிலாந்து பேட்டி யூனிட் மொத்தமாக அழிக்கப்படலாம்.

இது பார்ப்பதற்கு அருமையான ஒன்று. ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து கண்டிஷனில் விளையாடினார்கள். ஆனால் தற்பொழுது ஒன்றுக்கு மூன்று தரமான சுழற் பந்துவீச்சாளர்களை இந்தியாவில் விளையாட வேண்டும். இந்தியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!