ஐபிஎல் 2024

நடராஜனுக்கு இந்த முக்கிய குவாலிட்டி இருக்கு.. இந்திய டீம்ல இருக்கனும் – ஹைதராபாத் கோச் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்தியாவில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் தேதி நடக்கிறது. இதற்கு அடுத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடங்குகிறது. இதில் நடராஜன் குறித்து ஹைதராபாத் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் முக்கிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மொத்தம் எட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி நடராஜன் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆகி மிகச் சிறப்பாக விளையாடும் நேரத்தில், அவர்களது கட்டுப்படுத்துவதோடு விக்க
கெட்டையும் கைப்பற்றக்கூடிய அளவில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியிலும், ரிசர்வ் வீரர்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜன் பெயர் இடம் பெறவில்லை. குறிப்பாக ரிசர்வ் வீரர்கள் இடத்தில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது பெயர் இடம் பெற்று இருக்கிறது. இந்த இடத்தில் ஆவது நடராஜனுக்கு இடம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருக்கிறது.

மேலும் தமிழ்நாட்டு வீரரான பத்ரிநாத் நடராஜனுக்கு இடம் தராதது குறித்து மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். உலகக் கோப்பை நெருங்க நெருங்க அவருக்கான ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவரை எப்படியாவது இதே டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற செய்ய வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் கூறும்பொழுது “இந்தியாவில் நிறைய தரமான வீரர்கள் இருக்கிறார்கள். நடராஜனுடைய பலம் என்னவென்றால், அவர் பேட்ஸ்மேன்களை மிக நன்றாக கட்டுப்படுத்த கூடியவர். இதற்கு அவருடைய யார்க்கர் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனாலே அவர் எங்கள் அணியின் பெரிய சொத்தாகவும் இருக்கிறார்.

அவர் தற்போது செல்லும் வழியில் சென்று கொண்டே இருந்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் முழுவதுமாக பார்மை தக்க வைத்துக் கொண்டால், தற்பொழுது அவர் குறித்து பேசுவது போல அவர் செயல்பட்டு கொண்டே வந்தால், இந்திய அணிக்கு செல்வதற்கான தூரம் அவருக்கு அதிகம் கிடையாது. சீக்கிரத்தில் இந்திய அணியில் அவர் இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

Published by