“ஹஸ்சி ஏதாவது நம்பற மாதிரி சொல்லுங்க?” – அஷ்வின் தாக்கு!

0
313
Ashwin

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு டி20 தொடரான பிக்பேஷ் தொடர் நடந்து வருகிறது. இந்த வாரத்தில் ஒரு சர்ச்சையான நிகழ்வு இந்த தொடரில் இடம் பெற்றிருந்தது!

ஆஸ்திரேலியா அணியின் பிரபல சுழற் பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா பேட்ஸ்மேன் தன் பந்துவீச்சு முனையில் இருந்து பந்தை வீசுவதற்கு முன் வெளியேறி சென்றார் என்று ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

ஆனால் பந்து வீச்சாளர் வேண்டுமென்றே பந்தை வீசி முடிக்காமல் ரன் அவுட் செய்ததாக நாட் அவுட் மூன்றாவது நடுவரால் தரப்பட்டது. இந்த பிரச்சனை அப்பொழுது சர்ச்சையாக, ஆடம் ஜாம்பா அங்கம் வகிக்கும் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிரபல ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டேவிட் ஹஸ்சி, இது சரியான முறை இல்லை என்றும், அவுட் வழங்கப்பட்டிருந்தாலும் நாங்கள் அதை திரும்ப வேண்டாம் என்று சொல்லி இருப்போம் என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது அவரது இந்த பேச்சுக்கு தனது கடுமையான கண்டனத்தை இந்திய அணியின் பிரபல சுழற் பந்துவீச்சாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்!

இது பற்றி அவர் கூறும் பொழுது ” இது தவறான கிரிக்கெட் என்று கூற டேவிட் ஹஸ்சிக்கு உரிமை கிடையாது. அவர் விரும்புகின்ற மாதிரி அவர் விளையாடட்டும். அடுத்து அவுட் கொடுத்து இருந்தாலும் நாங்கள் வாங்கி இருக்க மாட்டோம் என்று சொல்வதையெல்லாம் நம்ப முடியாது. சொந்த அணியின் வீரரையே ஒரு பயிற்சியாளர் ஆதரிக்காவிட்டால் அந்த வீரர் எப்படி அணிக்காக உழைப்பார்? ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “முதலில் அது அவுட்டா இல்லை நாட் அவுட்டா? இல்லை அவர் பந்தை வீசி முடிப்பது போல் செய்துவிட்டாரா என்பது எல்லாம் இரண்டாவது. எதற்காக பேட்ஸ்மேன் பந்தை ரிலீஸ் செய்யும் முன் வெளியே போக வேண்டும். எந்த பேட்ஸ்மேன் தற்காப்பு ஆட்டம் விளையாடி பந்து வீச்சாளரை காப்பாற்ற நினைக்கிறார்? பந்தை ரிலீஸ் செய்து பேட்ஸ்மேன் எந்த ரியாக்ஷனும் செய்யாத முன்னால் வெளிய போவதே என்னை பொறுத்தவரை தவறுதான். இப்படி ஒரு பிரச்சனை நடக்கும் போதெல்லாம் எங்கிருந்தாவது தலையை தூக்கிக் கொண்டு பாம்பு போல் வந்து விடுகிறார்கள்!” என்று தனது கோபத்தை கடுமையாகவே தெரிவித்திருக்கிறார்!