தந்தையைப் போலவே அறிமுக ரஞ்சிப் போட்டியில் சதம்; அர்ஜுன் டெண்டுல்கர் சாதனை!

0
554
Arjun

தற்பொழுது இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் எலைட் சி பிரிவில் இடம் பெற்றுள்ள கோவா மற்றும் ராஜஸ்தான் அணிகள் எதிர்த்து விளையாடி வருகின்றன!

இந்த ஆட்டம் நேற்று துவங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கு அடுத்து களம் இறங்கிய கோவா அணிக்கு ஆரம்பம் எதுவும் நன்றாக அமையவில்லை.

- Advertisement -

அந்த அணி தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை இழக்கையில் 210 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. மேலும் அந்த ஐந்து பேட்ஸ்மேன்களில் ஒருவர் மட்டுமே அரை சதம் அடித்திருந்தார்.

இந்த நிலையில் களத்தில் இருந்த பிரபு தேசாய் உடன் அர்ஜுன் டெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிக நேர்த்தியாகவும் அதே சமயத்தில் தேவைப்படுகின்ற ரன்களை அடித்தும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள்.

ஒரு முனையில் பிரபு தேசாய் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க, மறுமுனையில் அர்ஜுன் டெண்டுல்கர் அரை சதம் தாண்டி விளையாடி கொண்டு இருந்தார். இது அவருக்கு ரஞ்சியில் முதல் அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் மிகச் சிறப்பான தனது முதல் சதத்தை முதல் போட்டியிலேயே அடித்து அசத்தினார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிமுக ரஞ்சி போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். தற்பொழுது அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரும் டிசம்பர் மாதத்தில் தனது அறிமுக ரஞ்சிப் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். சதம் அடித்த பிரபு தேசாய் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் இருவரும் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். கோவா அணி 410 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது!