நியூசிலாந்துக்கு எதிரான் முதல் டி20.. இந்திய அணியில் நிலவும் குழப்பம்.. என்ன முடிவு எடுப்பார் ஹர்திக்!

0
1230

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் கேப்டனாக திரும்புகிறார். இந்தத் தொடரில் வழக்கம் போல் விராட் கோலி ,ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலும் திருமணம் காரணமாக இடம்பெறவில்லை.

- Advertisement -

இதனால் முற்றிலும் இளம் வீரர்களை வைத்து களமிறங்கும் சூழலுக்கு ஹர்திக் பாண்டியா தள்ளப்பட்டுள்ளார். ஆனால் எந்த இடத்தில் எந்த வீரர்களை விளையாட வைப்பது என்ற குழப்பம்  இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது இசான் கிஷன் மோசமான ஃபார்மில் இருந்தாலும் அவர் தொடக்க வீரராக விளையாடுவார்.  இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் அவருக்கு இடம் கிடைத்தாலும் அது கடைசி வாய்ப்பாக பார்க்கப்படும். சுபமன் கில் தொடக்க வீரராக விளையாடுவார் என்று ஹர்திக் பாண்டியா ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் நடுவரசை பொறுத்தவரை அணியில் எந்த குழப்பமும் இல்லை. ராகுல் திருப்பாதி, சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நடு வரிசையில் வழக்கம் போல் விளையாடுவார்கள். இந்த நிலையில் அக்சர் பட்டேல் இடத்தில் தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு ஆல் ரவுண்டர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஆக சிவம் மவி,உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங் ஆகிய 3 வீரர்களும் இடை பெற அதிகமாக வாய்ப்பு உள்ளது.

இதே போன்று சுழல் பந்துவீச்சாளருக்கான போட்டியில் பார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவாரா இல்லை சாகலுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்பது டாஸ் போடும்போது தான் தெரியும். இதுவரை ராஞ்சியில் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாஸ் வென்று இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -