0, 0, 100(48).. இரண்டு போட்டியில் டக், 3வது போட்டியில் சதம்! எப்படி என்னை நம்பினார்கள்? – சதம் விளாசிய ஆட்டநாயகன் ரிலே ரோசவ் பேட்டி!

0
420

முதல் இரண்டு டி20 போட்டியில் டக் அவுட் ஆன பிறகு எப்படி மீண்டும் அணியிடம் பிடித்தேன் என்று பேட்டி அளித்திருக்கிறார் ஆட்டநாயகன் ரிலே ரோசவ்.

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக டி காக் மற்றும் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார்கள். இம்முறையும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் பாவுமா. 

இரண்டாவது டி20 போட்டியில் டக் அவுட் ஆன ரிலே ரோசோ அபாரமாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்கள் அளித்திருந்த இதில் நான்கு சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். கடைசியில் வந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து ஐந்து பந்துகளுக்கு 19 ரன்கள் அடித்திருந்தார் மில்லர். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா அணி. 

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினர். அதுவும் நீடிக்கவில்லை. 

14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ரிஷப் பன்ட் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்த போது, துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி 120 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்திருந்தது. பின்னர் தீபக் சகர் 17 பந்துகளில் 31 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார்ம் அதுவும் நீடிக்கவில்லை. 178 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 

சதம் விலாசி தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிலே ரோசவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்த பிறகு, முதல் 2 போட்டிகளில் டக்அவுட் மூன்றாவது போட்டிகள் சதம். இது எப்படி சாத்தியமானது? இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன பிறகு எந்த நம்பிக்கையில் மூன்றாவது போட்டியிலும் உள்ளே வைத்திருந்தார்கள்? என்பது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார் ரோசவ்.

அவர் அடுத்த பேட்டியில், “இது போன்ற ஒரு கடினமான சூழலை கிட்டத்தட்ட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சந்தித்திருப்பர். அதிர்ஷ்டவசமாக இன்றைய நாள் எனக்கானதாக அமைந்தது. டி காக் என் மீது அதீது நம்பிக்கையை கொண்டிருந்தார். இன்றைய போட்டியில் நீதான் அதிக ரன்கள் அடிக்கிறாய் என்று ஊக்கப்படுத்தினார். உலகத்தரம் மிக்க இந்திய அணிக்கு எதிராக இப்படி விளையாடி, தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு உதவியதில் நம்பிக்கை வந்திருக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன பிறகு அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடந்தது. உனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. நீ நன்றாக விளையாடுவாய் என்று தொடர்ந்து ஆதரவு கொடுத்தார்கள். ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்த நம்பிக்கை தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். டி காக் உடன் இணைந்து இன்றைய போட்டியில் ரன் குவித்தது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.