கால்பந்து உலகக்கோப்பையில் பரிசுத்தொகைகள் எவ்வளவு? முழு விவரம் உள்ளே!

0
202
Argentina

உலகத்தின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் இன்று சற்று முன் நடந்து முடிந்திருக்கிறது!

இந்தக் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் கடந்த உலகக் கோப்பையின் சாம்பியன் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினா அணியும் இன்று பலப் பரிட்சை நடத்தின!

- Advertisement -

இன்றைய போட்டியில் முதல் 90 நிமிடத்தில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருக்க, வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 3-3 என சமநிலை தொடர, பெனால்டி சூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக்கோப்பையை 36 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றி அசத்தியிருக்கிறது!

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 3600 கோடி பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு இந்திய மதிப்பில் 344 கோடியும், தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கு 245 கோடியும் வழங்கப்படுகிறது!

இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த குரோசியா அணிக்கு 220 கோடியும், நான்காவது இடம் பிடித்த மொராக்கோ அணிக்கு 204 கோடியும் வழங்கப்படுகிறது!

- Advertisement -

மேலும் ஐந்து முதல் எட்டாவது இடம் வரை உள்ள அணிகளுக்கு தலா 138 கோடி வழங்கப்படுகிறது. 9 முதல் 16ஆவது இடம் வரை பிடித்த அணிகளுக்கு தலா 106 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 17 முதல் 32 ஆவது இடம் வரை இடம் பெற்றுள்ள அணிகளுக்கு தலா 74 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது!

கட்டுரையில் இடம் பெற்றுள்ள மொத்த பரிசு தொகையும் இந்திய மதிப்பில் வழங்கப்படுவது ஆகும். இந்த பரிசுத் தொகை மதிப்பின் மூலம் உலகில் விளையாட்டுகளில் கால்பந்து எத்தகைய இடத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!