“வேகம் ஸ்பின்னருக்கு எப்படிபா ஹெல்ப் பண்ணும்?” – இர்பான் பதானுக்கு பதிலடி தந்த முன்னாள் இந்திய ஸ்பின்னர்!

0
612
Kuldeep

இந்திய அணியில் சில காலமாக மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக குறைவாக இருக்கிறது. இந்திய அணியில் சில காலமாக நிரந்தர மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளராக சாகல் இருக்கிறார்.

ஆனால் இவர் மீது இந்திய அணி நிர்வாகத்திற்கு முழுமையான நம்பிக்கை கிடையாது என்பதுதான் உண்மை. கடந்த டி20 உலக கோப்பையில் இவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. காரணம் இவர் மிக எளிமையாக பவுண்டரி அடிக்கும் பந்துகளை எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தந்து விடுகிறார். அடுத்து மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருக்கும் நல்ல கூக்ளி வகை பந்துவீச்சு இவரிடம் இல்லை!

- Advertisement -

இப்படியான காரணங்களால் இவர் மீது அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை கிடையாது. அதே சமயத்தில் இவரை விட சிறந்தவர் யாரும் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களாக அணி நிர்வாகத்திற்கு தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் இழந்திருந்த பந்துவீச்சு செயல் திறனை மீண்டும் சிறப்பாக பெற்று இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி மீண்டு வந்த குல்தீப் யாதவ் அணி நிர்வாகத்திற்கு தற்பொழுது நம்பிக்கை அளிக்கிறார்.

நேற்று இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சாகலுக்கு பதிலாக இடம் பெற்ற இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 51 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டிக்கு பிறகு இவரது பந்துவீச்சில் உள்ள மாறுதல் பற்றி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் குறிப்பிடும்பொழுது, இவர் பந்துவீச்சு கோணத்தை மாற்றி உள்ளதால் இவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது வேகமாகவும் வீச முடிகிறது, இவரது தற்போதைய வெற்றிக்கு இந்த வேகமும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இர்பான் பதானின் கருத்தை மறுத்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் லட்சுமண சிவராமகிருஷ்ணன் கூறும்பொழுது
” அவர்கள் கிரிக்கெட் வர்ணனையில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது முழுமையாக எனக்கு தெரியாது. பந்தை வேகமாக வீசுவது என்பது ஒரு சுழற் பந்துவீச்சாளருக்கு எப்பொழுதும் உதவாது. பந்து வீசும் பொழுது உடலை சமநிலையில் வைத்துக் கொள்வதும், அதன் மூலம் காற்றில் வீசி அதிக சுழற்சியை பெறுவதும் தான் வெற்றியைத் தரும். இப்படிப் பந்தை சுழற்றி வீசுவதால் தான் அவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்!

மேலும் பேசிய அவர் “சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசினால், பந்து ஆடுகளத்தில் சறுக்கி பலன் அளிக்காமல் போகும். காற்றில் மெதுவாக வீசுவது மற்றும் நன்றாக சுழற்றி வீசுவது, நல்ல பினிஷ் தேவை. நீங்கள் உங்கள் கைகளின் வலிமையை பயன்படுத்துவது எந்த விதத்திலும் பலனளிக்காது” என்று தெரிவித்துள்ளார்!