ஸ்ரேயாசை பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் எப்படி விட்டார்கள்? – வாசிம் ஜாபர் ஆச்சரியம்!

0
863
Wasim Jaffer

பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய அணி தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று சிட்டாகிராமில் துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நான்கு விக்கெட்டுகளை 112 ரண்களுக்கு இழந்து விட்டது. கே எல் ராகுல், சுக்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்து விட்டார்கள்!

- Advertisement -

இதற்குப் பிறகு இணைந்த புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் 149 ரன்கள் சேர்த்து இந்திய அணியை மீட்டெடுத்தனர். இதில் ஆட்டத்தில் இறுதி நேரத்தில் புஜரா ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் ஸ்ரேயாஸ் இரண்டு முறை எளிதான அவுட் வாய்ப்பிலிருந்து தப்பித்து இன்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்து களத்தில் இருக்கிறார்.

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் ” ஸ்ரேயாஸ் அவரது குறுகிய கால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை சிக்கலில் இருந்து சிலமுறை மீட்டு எடுத்து உள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி இது அவரது சிறப்பான ஆட்டம்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“சுழற் பந்து வீச்சுக்கு எதிரான ஸிரேயாசின் பேட்டிங் டெக்னிக் என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் சிறந்த நுட்பத்தை பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக பங்களாதேஷ் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷார்ட் பந்து யுக்தியை பயன்படுத்தாதது எனக்கு வியப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்!