இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது? முழு அலசல்!

0
2974
T20wc22

ஞாயிறன்று குழு இரண்டில் மொத்தம் மூன்று போட்டிகள் நடக்கிறது, முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதுகிறது. மூன்றாவது போட்டியில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதுகிறது!

இந்திய அணி மூன்றாவதாக விளையாடுவதால், முடிவுகளை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாட வசதியாக இருக்கும் என்பது இதில் இருக்கும் ஒரு கூடுதல் சாதகம்!

இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற ஜிம்பாப்வே அணியை வெல்ல வேண்டும் இல்லை அந்த போட்டி மழையால் டிரா ஆக வேண்டும். இல்லையென்றால் தென் ஆப்பிரிக்கா இல்லை பாகிஸ்தான் இரு அணிகளில் ஒரு அணி தங்களின் கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவர்கள் இருவரும் ஜெயித்து இந்திய அணி தனது ஆட்டத்தில் தோற்றால் இந்திய அணி வெளியே வந்துவிடும்!

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற, தனது கடைசி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை வெல்ல வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும் இல்லை அந்த ஆட்டம் மழையால் டிரா ஆக வேண்டும். இல்லையென்றால் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்க வேண்டும். இந்த இரண்டும் நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான அணி வெளியே வந்து விடும்!

தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்குத் தகுதி பெற, தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வெல்ல வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான அணி தனது கடைசி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோற்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி ஆட்டத்தில் வெல்லாவிட்டால், இந்திய அணிக்கு என்ன நடந்தாலும், அது தென் ஆப்பிரிக்க அணிக்கு நன்மையாக முடியாது!

அடுத்து இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் தோற்று, பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வென்று, தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி ஆட்டம் மழையால் டிரா ஆகும் பொழுது, மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகள் பெற்று இருக்கும். இதில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தலா மூன்று வெற்றிகள் பெற்றிருக்கும். எனவே இந்த இரு அணிகளின் ரன் ரேட் பார்க்கப்படும். இதில் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் அதிகமாக இருப்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்புகள் நுழையும்.

அடுத்து இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் கணக்கில் எடுத்துப் பார்க்கப்படும். இந்தியா தென்னாபிரிக்க அணியை விட ரன் ரேட்டில் பின்தங்கிதான் இருக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு வெற்றி இரண்டு டிரா என்று 6 புள்ளிகளுடனும், இந்தியா மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடனும் இருக்கும். தென் ஆப்பிரிக்க அணியை விட இந்திய அணி கூடுதலாக ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதால் இரண்டாவது அணியாக இந்திய அணியே அரையிறுதி வாய்ப்புக்கு தகுதி பெறும். புள்ளிகள் சமமாக இருக்கும் பொழுது, முதலில் ஒரு அணி எத்தனை வெற்றி பெற்று இருக்கிறது என்றுதான் பார்க்கப்படும். வெற்றிகள் சமமாக இருக்கும் போதுதான் ரன் ரேட் பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!