எனக்கு கையில் காயம்.. நான் மட்டும் பவுலிங் பண்ணீருந்தால் இந்தியாவின் கதையே வேற மாதிரி மாறிருக்கும் – இலங்கை கேப்டன் பேட்டி!

0
27521

என் விரலில் காயம் ஏற்பட்டதால் என்னால் சரியாக பந்துவீச முடியவில்லை. இல்லையென்றால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் என பேசினார் இலங்கை அணியின் கேப்டன் ஷனக்கா.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். இதில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும்.

ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். கடைசியில் வந்த அக்சர் பட்டேல் ஒன்பது பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்தது.

229 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க ஜோடி குஷால் மெண்டிஸ்(23) மற்றும் நிஷங்கா(15) இருவரும் முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் சேர்த்தனர்.

தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். கேப்டன் ஷனக்கா இப்போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்து, 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்து பரிதாபமாக வெளியேறினார்.

இறுதியில் 16.4 ஓவர்கள் மட்டுமே பிடித்து 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. 1-2 என டி20 தொடரை இழந்தது இலங்கை அணி.

இதுபற்றி இலங்கை கேப்டன் ஷனக்கா பேசுகையில், “இந்த தொடருக்கு பார்ம் இல்லாமதான் வந்தேன். என்னோட பார்ம் திரும்ப கிடைச்சிருச்சு. கை விரலில் அடிப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சரியாகிவிட்டது. டி20ல் சரியாக பந்துவீசமுடியவில்லை. பேட்டிங்கில் பங்காற்றியதுபோல பவுலிங்கில் செய்திருந்தால் தொடர் எங்கள் பக்கம் திரும்பியிருக்கும். முதல் போட்டி சிறிய மார்ஜினில் தான் இந்தியா வென்றது. இந்தியாவிற்கு வாழ்த்துக்கள், சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். எங்கள் பாய்ஸ் ஒருநாள் போட்டியில் யாரென்று காட்டுவோம்.” என்றார்.