அவர் மனநலம்பாதிக்கப் பட்டுள்ளார் – ஷகிப் அல் ஹசன் குறித்து பேசியுள்ள நஸ்முல் ஹசன்

0
802
Shakib Al Hassan

பங்களாதேஷ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரர் ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் தொடரில் 2011 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா அணியில் விளையாடினார். பின்னர் 2018 மட்டும் 2019 ஆம் ஆண்டில் ஐதராபாத் அணியில் விளையாடிய அவர், மீண்டும் கொல்கத்தா அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்று விளையாடினார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் 9 போட்டிகளில் விளையாடியவர் பேட்டிங்கில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. பந்துவீச்சிலும் மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை மட்டுமே ஷகிப் கைப்பற்றி இருந்தார்.

அதன் காரணமாக நடந்துமுடிந்த மிக இடத்தில் அவரை கொல்கத்தா அணி மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. கொல்கத்தா அணி வாங்க முயற்சிக்க வில்லை என்றாலும் இறுதி நேரத்தில் ஏதேனும் ஒரு அணி இவரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் இவரது ஆட்டம் சற்று சுமாராக இருந்த காரணத்தினால் மற்ற அணிகளும் இவரை கைப்பற்றவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஷகிப் அல் ஹசன் வெளியேறல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அணி வருகிற மார்ச் 18ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட போவதில்லை என்று ஷகிப் முன்கூட்டியே பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் இவரை எந்த அணியும் கைப்பற்ற காரணத்தினால், மீண்டும் டெஸ்ட் தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் நஸ்முல் ஹசனிடம் தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது அனைத்து பங்களாதேஷ் வீரர்கள் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் தனக்கு உடல் மற்றும் மனரீதியாக ஓய்வு தேவை என்று ஷகிப் கூறியுள்ளார். அதன் காரணமாக ஒருநாள் தொடரில் விளையாட போவதில்லை என்றும் அதற்கு பதிலாக டெஸ்ட் தொடரில் விளையாடுவேன் என்றும் ஷகிப் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்திடம் தற்பொழுது கூறியிருக்கிறார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் – பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாக தலைவர் நஸ்முல் ஹசன்

இது சம்பந்தமாக பேசியுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் “அவர் எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசுகிறார் என்று சுத்தமாக புரியவில்லை. ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணி இவரை கைப்பற்றியிருந்தால், இவ்வாறு கூறியிருப்பாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். முதலில் ஐபிஎல் தொடருக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட போவதில்லை என்று கூறிய அவர் தற்போது ஒருநாள் தொடரை தவிர்த்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதாக கூறியிருக்கிறார்.

எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சரி அதை முறையான நேரத்தில் அறிவித்துவிட வேண்டும். நாங்கள் யாரையும் வற்புறுத்தப் போவதில்லை. கடைசி நேரத்தில் இவ்வாறு ஒரு வீரர் கூறும் நிலையில் அவசர அவசரமாக திட்டத்தை மாற்ற வேண்டும்.

மேலும் பேசிய அவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சந்தோஷமான மனநிலையில் விளையாடவில்லை. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பொழுதிலும் அவர் அந்த வெற்றியை கொண்டாடவில்லை. ஒரு வீரர் தான் விளையாடும் தேசிய அணியின் வெற்றியை கொண்டாடாத மனநிலையில் இருந்தால் நிச்சயமாக ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் அவர் மனம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று இறுதியாகக் கூறி முடித்தார்.