ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு இவர் ஒரு துருப்பு சீட்டாக இருக்கப் போகிறார் – முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

0
105

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர் குறிப்பிட்டு அவர் போட்டியில் ஒரு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் பெருமையாக பாராட்டிப் பேசியிருக்கிறார்.

இந்திய அணியில் கலக்கி வரும் ஹர்ஷால் பட்டேல்

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் முப்பத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக
பர்ப்பில் நிற தொப்பியை வென்றார். கடந்த ஆண்டு மட்டும் இன்று தற்போது இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் மொத்தமாக 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்திய அணியிலும் கடந்த ஆண்டு முதல் 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவருடைய பவுலிங் எக்கானமி நாளுக்கு நாள் சிறப்பாகி கொண்டு வருகிறது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் – கவாஸ்கர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இருந்தாலும் இந்திய அணிக்கு நிச்சயமாக ஹர்ஷால் பட்டேல் ஒரு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய கவாஸ்கர், கேப்டனுக்கு சற்று பந்துவீச்சில் ஒரு மாற்றம் தேவைப்பட்டால் அந்த நேரத்தில் இவர் கை கொடுப்பார். பௌலிங் லைனை மாற்றி பவர் ப்ளே ஓவர்களில் கூட சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர் என்றும் சுனில் கவாஸ்கர் பெருமையாக கூறியுள்ளார்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்மித் கூட, “டெத் ஓவர்களில் சற்று ஸ்லோ பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை சிரமத்திற்கு ஆளாக கூடிய வித்தை அவரிடம் உள்ளது. அவ்வாறு பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்று, ஆனால் அவர் அதை சிறப்பாக செய்கிறார். என்னைப் பொறுத்தவரையில் அவர் மிகவும் தெளிவான ஒரு வேகப்பந்துவீச்சாளர்”, என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.