மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியுமா ? – அதற்கு என்ன செய்ய வேண்டும்

0
1069
Rohit Sharma Mumbai Indians

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகபட்சமாக ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பரிதாபமான நிலையில் உள்ளது. இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

லீக் தொடரில் ஒரு அணி மொத்தமாக 14 போட்டிகளில் விளையாட வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி தற்பொழுது 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 8 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. 8 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் மும்பை அணியால் நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

- Advertisement -
ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் இருக்கின்றது

கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். கடந்த ஆண்டுகளில் லீக் தொடர் முடிவை எடுத்து பார்க்கையில் 14 புள்ளிகள் எடுத்தாலே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்து விடலாம். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றன.

இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு இதே போல 10 அணிகள் பங்கேற்று விளையாடி ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில், 14 புள்ளிகளைப் பெற்ற பஞ்சாப் அணியால் விளையாடி சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதை தற்போது ஒப்பிட்டு பார்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீதமிருக்கும் எட்டு போட்டியுலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளைப் பெற வேண்டும். லீக் தொடரின் முடிவில் 16 புள்ளிகள் பெற்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெறுவது மிகப்பெரிய சவால் என்றாலும், அதை மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி அதனுடைய அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருகிற ஏப்ரல் 21ஆம் தேதியன்று மும்பையில் உள்ள டிஒய் பட்டில் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.