சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வழி இதுதான்

0
4083
MS Dhoni CSK

2022 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. அனைத்து அணிகளுக்கும் இன்னும் 5 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. ஒரு சில அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் ஒரு காலைப் பதித்தது. இன்னும் அதிகாரப்பூர்வமாக மட்டுமே அறிவிக்கப்படவில்லை. மற்ற சில அணிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது வகையில் இடம்பெற்றுள்ளது.

பங்கேற்ற 9 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 9 தோல்வி கண்டுள்ளது. சி.எஸ்.கே அணி தற்போது கடைசிக்கு முன்னதைய இடத்தில் தத்தளிக்கிறது. இந்த சீசன் துவக்கத்தில் தோனி தன் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவின் தோள்களில் வைத்துவிட்டு தன் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடிவு செய்து அதை வெற்றிகரமாக நிகழ்த்தினார். வெகு நாட்களுக்குப் பின் அரை சதம் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் குதிக்க வைத்தார்.

ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி பெரிதாக சோபிக்கவில்லை. அதற்கு முற்றிலும் அவரை குறை சொல்லிவிட முடியாது. முக்கிய வீரர் தீபக் சாஹர் இல்லாதது பெரிய தலைவலியாக கருதப்படுகிறது. மேலும், ஜடேஜா எடுக்கும் முடிவுகள் இறுதியில் நல்ல பலனையும் தரவில்லை. மிக முக்கியமான டாஸும் சென்னை அணிக்கு சாதகமாக அமையவில்லை. மேலும் அணியை வழிநடத்துவதால் தன் ஆட்டத்தில் பின்னடைவைக் கண்டார் ஜடேஜா. இதனால் மீண்டும் தோனியை கேப்டனாக செயல்பட அழைத்து தன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்த சீசனில் கேப்டனான முதல் போட்டியிலேயே வெற்றியைப் பதிவு செய்தார் எம்.எஸ்.தோனி. பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது. தற்போது, தோனி மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பியுள்ளதால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கான பதில், எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும். அதற்குப் பிறகு பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் போன்ற அணிகளின் வெற்றி தோல்வி குறித்தே சென்னை அணியின் இடம் தீர்மானிக்கப்படும்.

அனைத்து சென்னை ரசிகர்களும் மீண்டும் ஓர் 2010 மேஜிக் நடந்துவிடாதா என ஏங்குகின்றனர். மேலும், சென்ற ஆண்டைப் போல இம்முறை இல்லை. 16 புள்ளிகள் போதுமானது e முடிவு செய்துவிட முடியாது. குஜராத் அணி ஏற்கனவே 9 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்றுவிட்டது. லக்னோ அணி 14 புள்ளிகளும், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் 6 & 5 வெற்றுகளுடன் 3வது மற்றும் 4வது இடத்தில் நீடிக்கிறது. இத்தனை அணிகளையும் தாண்டி சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவது சற்றுக் கடினம் தான். ஒருவேளை நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதை நிகழ்த்திக் காட்டினால் சாமர்த்தியம் தான்.