தென்ஆப்பிரிக்கா தொடரின் 2வது டெஸ்ட்டில் கேப்டன் கே.எல்.ராகுல் ஸ்டிக்கர் இல்லாத பேட்டுடன் விளையாடுவதற்கு இதுதான் காரணம்

0
1644
KL Rahul Without Bat Sponsor

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டித் துவங்குவதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலிக்கு சிறிய தசை பிடிப்பு ஏற்பட்ட காரணத்தினால், அவரால் இன்று விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே விராட் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக இன்று இந்திய அணியை தலைமை தாங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது 4 டெஸ்ட் போட்டிகளில் எந்த போட்டியிலும் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால் இந்த வருடம் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய டெஸ்ட் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் மத்தியில் பல்வேறு சாதனையை அந்த போட்டியில் அவர் படைத்தார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஒருநாள் போட்டி தொடரில் ரோஹித் ஷர்மா விளையாட முடியாத காரணத்தினால், அவருக்கு பதிலாக இந்திய அணியை கேப்டனாக கே எல் ராகுல் தலைமை தாங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிக்கலான நிலையில் சிக்கி தவிக்கும் இந்திய அணி

டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 37 ஓவர் முடிவில் இந்திய அணி 86 ரன்கள் இலக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ( மயங்க் அகர்வால் – 26, புஜாரா – 3 மற்றும் ரஹானே – 0 ) சற்று தடுமாறி கொண்டிருக்கிறது. களத்தில் தற்பொழுது கேப்டன் கே எல் ராகுல் 37* ரன்களிலும் ஹனும விஹாரி 16* ரன்களிலும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

பேட்டில் ஸ்டிக்கர் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கும் கே எல் ராகுல்

கே எல் ராகுலின் ஸ்பான்சர்ஷிப் நிர்வாணமாக எஸ்ஜி கிரிக்கெட் ( சான்ஸ்பரில்ஸ் கிரீன்லேண்ட்ஸ் ) கடந்த நாட்களில் இருந்து வந்தது. அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் பொறிக்கப்பட்ட பேட்டை கேஎல் ராகுல் இதுநாள் வரையில் உபயோகப் படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இன்று 2வது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் பேட்டில் எஸ்ஜி கிரிக்கெட் ஸ்டிக்கர் காணப்படவில்லை. ஆனால் அவரது பேட்டிங் கிளவுஸ்ஸில் அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் காணப்பட்டது.

இது சம்பந்தமாக வந்த அதிகாரப்பூர்வமில்லாத செய்தியின் அடிப்படையில் எஸ்ஜி நிறுவனம் கே எல் ராகுலின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை எனவும், அதன் காரணமாகவே இன்று அவர் அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் இல்லாத பேட்டுடன் விளையாடி கொண்டிருக்கிறார் என தற்பொழுது தெரியவந்துள்ளது.

- Advertisement -

ஒருவேளை இந்த செய்தி உண்மையானால், அவருடைய அடுத்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் மிகப்பெரிய தொகைக்கு செல்லும் என்று நிச்சயமாக நாம் எதிர்பார்க்கலாம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இல்லாத நேரத்தில் இந்திய அணியை தலைமை தாங்குவது, புதிய ஐபிஎல் அணியில் கூடிய விரைவில் கேப்டன் பதவி, அதுமட்டுமின்றி வருங்கால இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் வலம் வரப் போவதால் நிச்சயமாக அவருடைய பேட் ஸ்பான்சர்ஷிப் மிகப்பெரிய தொகைக்கு செல்லும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.