2022 ஐ.பி.எல் தொடர் ஏலத்தில் பங்கேற்க போகும் ஒவ்வொரு அணியின் கையிருப்புத் தொகை விவரம்

0
873
IPL Auction 2022 Purse Amount

கடந்த ஒரு சில ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சற்று வித்தியாசமாக இருக்க போகிறது. ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட புதிய வீரர்களுடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்களில் களமிறங்க போகின்றது. பிசிசிஐ கடந்த ஆண்டு 8 ஐபிஎல் அணிகளுக்கும் ( மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ) சிலபல விதிமுறைகள் அறிவித்திருந்தது.

இனி வரும் ஐபிஎல் தொடருக்கு(2022 முதல் ) தங்களுடைய பழைய அணியில் இருந்து நான்கு வீரர்களை அதிகபட்சமாக தக்கவைத்துக் கொள்ளலாம். அந்த நான்கு வீரர்கள் 3 இந்திய வீரர்களாகவும், 2 ஓவர்சீஸ் வீரர்களாகவும் அல்லது 2 அன் கேப்டு ( இந்திய அணியில் விளையாடாத டொமஸ்டிக் லெவல் வீரர்கள் ) வீரர்களாக இருக்கலாம் என்று வலியுறுத்தி இருந்தது. ஒவ்வொரு அணிக்கும் இருப்புத் தொகையாக 90 கோடி ரூபாய் என பிசிசிஐ நிர்ணயித்து இருந்தது.

- Advertisement -

ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்தால் அதில் முதல் வீரராக தக்க வைக்கப்படும் வீரருக்கு 16 கோடியும், இரண்டாவதாக தக்க வைக்கப்படும் வீரருக்கு 12 கோடியும் மூன்றாவது வீரருக்கு 8 கோடியும், நான்காவது வீரருக்கு 6 கோடி ரூபாயும் என ஆக மொத்தத்தில் 42 கோடி ரூபாய் அந்த அணியின் இருப்புத் தொகையில் இருந்து கழிக்கப்படும். அதே சமயம் ஒரு அணி 3 வீரர்களை தக்க வைத்தால் அந்த அணியின் இருப்புத் தொகையில் இருந்து 33 கோடி ரூபாய் (முதல் வீரருக்கு 15 கோடி இரண்டாவது வீரருக்கு 11 கோடி மற்றும் மூன்றாவது வீரருக்கு 7 கோடி ) மொத்தமாக கழிக்கப்படும்.

ஒரு அணி வெறும் இரண்டு வீரர்களை மட்டும் தக்க வைத்தால் அந்த அணியின் இருப்புத் தொகையில் இருந்து மொத்தம் 24 கோடி ரூபாய் ( முதல் வீரருக்கு 14 கோடி ரூபாயும் இரண்டாவது வீரருக்கு 10 கோடி ரூபாயும் ) கழிக்கப்படும். ஒருவேளை ஒரு அணி வெறும் ஒரு வீரரை மட்டும் தக்க வைக்க விரும்பினால் அந்த வீரருக்கு 14 கோடி ரூபாய் கழிக்கப்படும் என்று பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் வலியுறுத்தியது.

பிசிசிஐயின் நிபந்தனைப்படி 8 அணிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அணி தக்க வைத்த வீரர்களைப் பற்றியும், ஒவ்வொரு அணி நிர்வாகம் கையில் தற்போது எவ்வளவு இருப்பு தொகை இருப்பது என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ்

தக்க வைத்த வீரர்கள் :

ரோஹித் ஷர்மா – 16 கோடி ரூபாய்

ஜஸ்பிரித் பும்ரா – 12 கோடி ரூபாய்

சூரியகுமார் யாதவ் – 8 கோடி ரூபாய்

கீரோன் பொல்லார்ட் – 6 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

மும்பை இந்தியன்ஸ் அணி 42 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 48 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தக்க வைத்த வீரர்கள் :

ரவீந்திர ஜடேஜா – 16 கோடி ரூபாய்

எம்எஸ் தோனி – 12 கோடி ரூபாய்

மொயின் அலி – 8 கோடி ரூபாய்

ருத்ராஜ் கெய்க்வாட் – 6 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 42 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 48 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தக்க வைத்த வீரர்கள் :

அன்ட்ரூ ரசல் – 16 கோடி ரூபாய்

வருன் சக்ரவர்த்தி – 12 கோடி ரூபாய்

வெங்கடேஷ் ஐயர் – 8 கோடி ரூபாய்

சுனில் நரைன் – 6 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 42 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 48 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ்

தக்க வைத்த வீரர்கள் :

ரிஷப் பண்ட் – 16 கோடி ரூபாய்

அக்ஷர் பட்டேல் – 12 கோடி ரூபாய்

பிருத்வி ஷா – 8 கோடி ரூபாய்

ஆண்ட்ரிச் நோர்ஜே – 6.5 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 42.5 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 47.5 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

தக்க வைத்த வீரர்கள் :

சஞ்சு சாம்சன் – 14 கோடி ரூபாய்

ஜோஸ் பட்லர் – 10 கோடி ரூபாய்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – 4 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 28 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 62 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

தக்க வைத்த வீரர்கள் :

விராட் கோலி – 15 கோடி ரூபாய்

கிலேண் மேக்ஸ்வெல் – 11 கோடி ரூபாய்

முகமது சிராஜ் – 7 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 33 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 57 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தக்க வைத்த வீரர்கள் :

கேன் வில்லியம்சன் – 14 கோடி ரூபாய்

அப்துல் சமது – 4 கோடி ரூபாய்

உம்ரான் மாலிக் – 4 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 22 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 68 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

தக்க வைத்த வீரர்கள் :

மயங்க் அகர்வால் – 14 கோடி ரூபாய்

அர்ஷ்தீப் சிங் – 4 கோடி ரூபாய்

இருப்புத் தொகை விவரம் :

பஞ்சாப் கிங்ஸ் அணி 18 கோடி ரூபாய் செலவழித்து, தற்போது அதன் கையில் 72 கோடி ரூபாய் இருப்புத் தொகையாக வைத்துள்ளது.

மேற்கூறிய அனைத்து அணிகளும் தங்கள் கையிருப்பு தொகையில் எவ்வளவு தொகை இருக்கிறதோ, அந்தத் தொகையுடன் ஏலத்தில் பங்கேற்க முடியும். அதேபோல ஒவ்வொரு அணி நிர்வாகமும் மீதமுள்ள கையிருப்பு தொகையை கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கலாம்.

இந்த எட்டு அணிகள் மட்டுமன்றி புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்கும் பிசிசிஐ ஒரு சில நிபந்தனைகளை கூறியுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மொத்தமாக மூன்று வீரர்களை ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக தேர்ந்தெடுத்துக் அந்த மூன்று வீரர்கள் 2 இந்திய வீரர்களாகவோ அல்லது ஒரு வெளிநாட்டு வீரராக அல்லது ஒரு அன்கேப்டு வீரராக ( இந்திய அணியில் விளையாடாத டொமஸ்டிக் லெவல் வீரர் ) இருக்கலாம். இந்த மூன்று வீரர்களுக்கு மொத்தமாக 33 கோடி ரூபாய் அந்த அணிகளின் இருப்புத் தொகையில் இருந்து கழிக்கப்படும். எனவே இந்த இரண்டு அணிகளும் 33 கோடி ரூபாய் போக மீதமுள்ள 57 கோடி ரூபாயுடன் ஐபிஎல் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.