ஐபிஎல் 2022 : காயம், சர்வதேசப் போட்டிகள் என பல்வேறு காரணங்களுக்காக முதல் ஒரு சில போட்டிகளில் பங்கேற்க இயலாத வீரர்கள்

0
57
IPL Players Unavailability 2022

தனிப்பட்ட காரணங்களுக்கான விலகல், காயங்கள், தேசிய அணிக்கு பங்கேற்றல் போன்ற காரணங்களால் ஐ.பி.எல் 15வது சீசனில் சிலபல ஆட்டங்களிலும், தொடர் முழுதும் விளையாட முடியாத வீரர்கள் விபரம் அணிவாரியாக;

மும்பை இந்தியன்ஸ்

முழங்கை காயத்திலிருந்து மீண்டுவரும் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த தொடரில் முழவதுமாய் பங்கேற்மாட்டார். வெஸ்ட்-இன்டீஸ் உடன் கடைசி ஆட்டத்தில் கைக்கட்டை விரலில் ஏற்பட்ட சிறிய எலும்பு முறிவினால், டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சூர்ய குமார் யாதவ் பங்கேற்க மாட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர் க்வாட்ரிஸேப்ஸ் காயத்தால் இந்தத் தொடரின் பாதிவரை பங்கேற்க முடியாது. விசா பிரச்சினையால் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி பங்கேற்க முடியாது. அதேபோல் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் ஆடவேண்டியிருந்ததால். செளத் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் டிவேன் ப்ரடோரியசும் ஆடமாட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆரோன் பின்ச் மற்றும் பாட் கம்மின்ஸ் தேசிய அணிக்கான கடமையால் கொல்கத்தாவான் முதல் நான்கு ஆட்டங்களில் பங்கெடுக்க மாட்டார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

செளத் ஆப்பிரிக்க வீரர்கள் மார்க்கோ ஜென்சன் மற்றும் எய்டன் மார்க்ரம் பங்களாதேசுடனான போட்டியில் பங்கேற்றதால், ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஆடமாட்டார்கள். ஆஸ்திரேலியாவின் சீன் அபோட் முதல் மூன்று ஆட்டங்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் விதிமுறைகளால் விளையாட முடியாது. 2021ஆம் ஆண்டு முதல் முழங்கைக் காயத்தால் அவதிப்படும் கேப்டன் வில்லியம்சனும் கேள்விக்குறியே!

ராஜஸ்தான் ராயல்ஸ்

பங்களாதேஷ் தொடரில் விளையாடிதால் முதல் போட்டியை தவறவிடுகிறார் செளத் ஆப்பிரிக்காவின் வான் டெர் டஸன்.

ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் விதிமுறையால் ஹேசில்வுட், வில் ஜோஸ் முதல் மூன்று ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள். முக்கிய வீரர் கிளைன் மேக்ஸ்வெல் புதிதாகத் திருமணம் செய்துள்ளதால், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்.

டெல்லி கேப்பிடல்ஸ்

ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் முதலிரண்டு ஆட்டங்களையும், மிட்செல் மார்ஷ் முதல் மூன்று ஆட்டங்களையும் தவறவிடுகிறார்கள். செளத்-ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி, பங்களாதேசின் முஸ்தாபிசுர் ரகுமான் முதல் போட்டியைத் தவற விடுகிறார்கள். முதல் சில ஆட்டங்களில் செளத் ஆப்ரிக்காவின் ஆன்ட்ரிச் நோர்க்யா இடுப்பு பகுதியின் காயத்தால் பங்கேற்பாரா என்பது சந்தேகமே!

பஞ்சாப் கிங்ஸ்!

முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா பங்கேற்க மாட்டார். இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ முதல் ஆட்டத்திலும், நியூசிலாந்து உடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆடுவதால், ஐ.பி.எல் கடைசிப்பகுதியிலும் ஆடமாட்டார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

இங்கிலாந்தின் மார்க்வுட் விலகியதால் ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரு டை சேர்க்கப்பட்டு இருக்கிறார். வெஸ்ட் இன்டீசின் ஜேசன் ஹேல்டர், கைல் மேயர்ஸ் முதல் போட்டியில் ஆடமாட்டார்கள். ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் முதல் மூன்று போட்டிகளில் ஆடமாட்டார்.

குஜராத் டைட்டன்ஸ்

இங்கிலாந்தின் ஜேசன் ராய் விலகியதால், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ஓபனிங் பேட்ஸ்மேன்குர்பாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இன்டீஸ் பாஸ்ட் பவுலர் அல்ஜாரி முதல் ஆட்டத்தைத் தவறவிடுவார்!