2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கர்ஜிக்க போகும் சென்னை அணி – சிஸ்கே வீரர்கள் பட்டியல் இணைப்பு

0
1895
CSK Players 2022

ஐபிஎல் மெகா ஏலம் சற்றுமுன் நடந்த முடிந்தது. நடப்பு சாம்பியன் அணியான சென்னை மிக அற்புதமாக மெகா ஏலத்தில் வீரர்களை கைப்பற்றியுள்ளது. மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக ரவிந்திர ஜடேஜா (16 கோடி ரூபாய்) மகேந்திர சிங் தோனி (12 கோடி ரூபாய்) மொயீன் அலி(8 கோடி ரூபாய்) மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட்(6 கோடி ரூபாய்) அந்த அணி தக்க வைத்திருந்தது.

இன்று அந்த அணி 45 கோடியே 50 லட்ச ரூபாய் செலவு செய்து இருபத்தி ஓரு வீரர்களை கைப்பற்றியுள்ளது. அதில் அதிகபட்சமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹரை 14 கோடி ரூபாய்க்கு அந்த அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பேட்ஸ்மேன்கள் :

(ருத்ராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே, ஹரி நிஷாந்த், சுப்ரன்சு சேனாபதி மற்றும் ராபின் உத்தப்பா)

நியூசிலாந்து அணியை சேர்ந்த டேவான் கான்வேயை ஒரு கோடி ரூபாய்க்கும், இந்திய வீரர்களான சுப்ரன்சு சேனாபதியை 20 லட்ச ரூபாய்க்கும், ஹரி நிஷாந்தை 20 லட்ச ரூபாய்க்கும் ராபின் உத்தப்பாவை 2 கோடி ரூபாய்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.

விக்கெட் கீப்பர்கள் :

(மகேந்திர சிங் தோனி, அம்பத்தி ராயுடு மற்றும் ஜெகதீசன்)

- Advertisement -

இந்திய வீரர்களான ஜெகதீசனை 20 லட்ச ரூபாய்க்கும் அம்பத்தி ராயுடுவை 6 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் கைப்பற்றியுள்ளது.

பந்து வீச்சாளர்கள் :

(மஹீஷ் தீக்ஷன, ராஜவர்தன் ஹங்கர்ஜ்கர்,சிமர்ஜித் சிங், ஆடம் மில்னே, முகேஷ் சவுதரி, பிரசாந்த் சோலங்கி, துஷார் தேஷ்பாண்டே, கே எம் ஆசிப் மற்றும் தீபக் சஹர்)

இலங்கையைச் சேர்ந்த மஹீஷ் தீக்ஷனவை 70 லட்ச ரூபாய்க்கும், நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆடம் மில்னேவை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கும் சென்னை அணி கைப்பற்றியது.

அதேபோல இந்திய பந்து வீச்சாளர்கள் தீபக் சஹரை 14 கோடி ரூபாய்க்கும், கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுதரி மற்றும் சிமர்ஜித் சிங் ஆகியோரை தலா 20 லட்ச ரூபாய்க்கும் சென்னை அணி கைப்பற்றியது.

ராஜவர்தன் ஹங்கர்ஜ்கரை 1 கோடியே 50 லட்ச ரூபாய்க்கும் பிரசாந்த் சோலங்கியை 1 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு சென்னை அணி கைப்பற்றியது.

ஆல்ரவுண்டர் வீரர்கள் :

(ரவிந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, கிரிஸ் ஜோர்டன், பகத் வர்மா, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ மற்றும் டிவைன் பிரிட்டோரியஸ்)

இந்திய ஆல் ரவுண்டர் சிவம் துபேவை 4 கோடி ரூபாய்க்கும், பகத் வர்மாவை 20 லட்ச ரூபாய்க்கும் சென்னை அணி கைப்பற்றியது. வெளிநாட்டு ஆல்ரவுண்டர் வீரர்கள் கிரிஸ் ஜோர்டனை 3 கோடியே 60 லட்ச ரூபாய்க்கும், மிட்செல் சான்ட்னரை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கும், டுவைன் பிராவோவை 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும், டுவைன் பிரிட்டோரியஸ்சை 50 லட்ச ரூபாய்க்கும் சென்னை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.