ஒவ்வொரு இந்திய வீரருக்கும் எவ்வளவு சம்பளம் எனும் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள பிசிசிஐ – சூரியகுமார் & சிராஜ் முன்னேற்றம்

0
2986
BCCI Contract for Players

ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ நிர்வாகத்தின் கீழ் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 தரவரிசையாக பிரிக்கப்படுவார்கள். ஏ பிளஸ் , ஏ, பி மற்றும் சி என மொத்தம் நான்கு தரவரிசை நிலை உள்ளது. இதில் ஏ பிளஸ் தரவரிசையில் இடம் பெற்ற வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், பி தரவரிசையில் இடம் பெற்ற வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி தரவரிசையில் இடம் பெற்ற வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், டி தரவரிசையில் இடம் பெற்ற வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயும் ஆண்டு வருமானமாக வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தின் காண்ட்ராக்ட் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் ஒரு சில வீரர்கள் தங்களுடைய முந்தைய தரவரிசையில் இருந்து முன்னேறியும், ஒரு சில வீரர்கள் தங்களுடைய முந்தைய தரவரிசையில் இருந்து பின்னேறியும் உள்ளனர். மறுப்பக்கம் ஒரு சில வீரர்கள் காண்ட்ராக்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது வெளியாகியுள்ள அந்த பிசிசிஐ காண்ட்ராக்ட் குறித்து பார்ப்போம்.

- Advertisement -

ஏ ப்ளஸ் தரவரிசை வீரர்கள் ( ஆண்டு வருமானம் – 7 கோடி ரூபாய் )

இந்த தரவரிசையில் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்

ஏ தரவரிசை வீரர்கள் ( ஆண்டு வருமானம் – 5 கோடி ரூபாய் )

- Advertisement -

இந்த தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது ஷமி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பி தரவரிசை வீரர்கள் ( ஆண்டு வருமானம் – 3 கோடி ரூபாய் )

இந்தத் தரவரிசையில் புஜாரா, ரஹானே, அக்ஷர் பட்டேல், தாகூர், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டி தரவரிசை வீரர்கள் ( ஆண்டு வருமானம் – 1 கோடி ரூபாய் )

இந்த வரிசையின் கீழ் ஷிகார் தவான், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், சஹால், ஹனும விஹாரி, சூர்யகுமார் யாதவ் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

காண்ட்ராக்டில் முன்னேறிய வீரர்கள் :

முந்தை வருடம் சி தரவரிசையில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் பட்டேல் இந்த வருடம் பி தர வரிசைக்கு முன்னேறி உள்ளனர்.அதேபோல சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக இந்த வருடம் சி தரவரிசை காண்ட்ராக்டை பெற்றிருக்கிறார்.

காண்ட்ராக்டில் பின்னேறிய வீரர்கள் :

முந்தைய வருடம் ஏ தரவரிசையில் இடம் பெற்றிருந்த ஷிகார் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்த வருடம் சி தரவரிசைக்கு பின்னேறியுள்ளனர்.

அதேபோல முந்தைய வருடம் ஏ தரவரிசையில் இடம்பெற்றிருந்த ரஹானே, புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இந்த வருடம் பி தர வரிசைக்கு பின்னேறியுள்ளனர்.

முந்தைய வருடம் பி தரவரிசையில் இடம் பெற்றிருந்த விருத்திமான் சஹா, மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சி தரவரிசைக்கு பின்னேறியுள்ளனர்.

குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் நீக்கப்பட்டு எந்தவித தரவரிசையிலும் இடம் பெறாமல், பிசிசிஐ காண்ட்ராக்டை இந்த வருடம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.