டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளிட்ட எந்த வீரர் வந்தாலும் இவர் தான் முதன்மை தேர்வாக இருப்பார் – அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்

0
2962
Harbhajan Singh and Rishabh Pant

கடந்த சில வருடங்களில் இந்திய அணிக்கு ஒரு நல்ல பினிஷிங் வீரர் தற்பொழுது வரை சரியாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வெளியேறியது. அதன் பின்னர் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா ஃபினிஷிங் வீரராக புதிய அவதாரம் எடுப்பார் என்று அனைவரும் நம்பினர்.

நன்றாக ஆடிக் கொண்டிருந்த அவருக்கு காயம் ஏற்பட சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வு எடுத்துக்கொண்டார். அவரது இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ரிஷப் பண்ட் தன்னுடைய ஆட்டத்தை ஒரு சில போட்டிகளில் வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு வெங்கடேஷ் ஐயரை விளையாட வைத்தும் இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்தது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு சரியான ஃபினிஷிங் வீரர் யார் என்கிற கேள்வி தற்போது வரை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

- Advertisement -
இந்த வீரர்தான் முதல் தேர்வாக இருப்பார்

இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது தன்னுடைய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்கள் அந்த இடத்திற்கு போட்டி போட்டாலும், அவர்கள் எல்லோரையும் புறம் தள்ளிவிட்டு தினேஷ் கார்த்திக் அந்த இடத்தை தன்வசப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

நடக்க இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு ஃபினிஷிங் வீரராக தினேஷ் கார்த்திக் தான் முதன்மை தேர்வாக இருப்பார் என்றும் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக்

- Advertisement -

7 போட்டிகளில் மொத்தமாக 210 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 205.88ஆக உள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 210 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.