டி20 கிரிக்கெட்டில் தற்போது உச்சநிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹென்றி கிளாஸன் ஒரு குறிப்பிட்ட ஷாட்டை சூரியகுமார் யாதவிடமிருந்து கடன் வாங்க விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக இரட்டை சத்தத்தை அடிக்க வாய்ப்புள்ள வீரர் யார்? என்பதையும் அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த பேட்ஸ்மேனான அவரது இந்த கருத்துகள் தற்பொழுது மிகவும் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் தக்க வைப்பில் புதிய சாதனை
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக 24.50 ரூபாய்க்கு மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாமல் வாங்கப்பட்டு இருந்தார். அதே சமயத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தக்க வைப்பதில் ஹென்றி கிளாசன் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் விராட் கோலியை விட மிக அதிகமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஹென்றி கிளாசில் 23 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் இதுவே தக்கவைக்கப்படும் வீரருக்கு வழங்கப்பட்ட அதிக சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியகுமார் – ஏபி.டிவிலியர்ஸ் கலவை
ஹென்றி கிளாசன் பேசும் பொழுது “ஏபி.டிவில்லியர்ஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள். இவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். இவர்கள் இருவரும் பந்தை பின்புறமாக நேராக அடிக்கக் கூடியவர்கள்.மேலும் சூரியகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு வேண்டும். நான் இப்படியான ஷாட் விளையாடியது இல்லை”
இதையும் படிங்க : ஷமி விஷயத்தில் அதிரடி திருப்பம்.. ஆஸிக்கு பெரிய பின்னடைவு.. ரோகித் கம்பீர் நிம்மதி பெருமூச்சு.. வெளியான தகவல்கள்
“மேலும் கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஆம்லா. அதே சமயத்தில் தற்போது டி20 கிரிக்கெட் உலகத்தில் முதல் முறையாக இரட்டை சதத்தை அடிக்கக்கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருப்பார்” என்று தெரிவித்திருக்கிறார். அபாயகரமான டி20 பேட்ஸ்மேனான இவர் தற்போது இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியிலும் பெரிய அளவுக்கு ரன்கள் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.