சர்ச்சையை கிளப்பும் இங்கிலாந்து வீராங்கனையின் வினோதமான ரன் அவுட்

0
2577
Heather Knight

இங்கிலாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் டிராவும் மூன்று  ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் தோல்வியையும் இரண்டாம் போட்டியில் வெற்றியும் பெற்றது.அந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்டின் ரன் அவுட் சர்ச்சையை கிளப்பி வருகிறது

கடந்த ஞாயிறுக்கிழமை ஹோவ் நகரில் நடைப்பெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 148 ரன்களை குவித்தது . இந்திய அணியில் அதிகபட்சமாக  தொடக்கவீரர் ஷபாலி வர்மா 48 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களும் எடுத்தனர் . இதனையடுத்து  149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது துவக்கத்தில் விக்கெட்ஸ் சர சரவென விழ தொடக்கவீரர்  பியூமெண்ட்  & கேப்டன்  ஹீதர் நைட் கூட்டணி அமைத்து ரன்களை உயர்த்தினர். போட்டி மெல்ல மெல்ல பக்கம் இங்கிலாந்து சென்றது.

- Advertisement -

 இங்கிலாந்து அணியின்  வெற்றிக்கு 42 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 14வது ஓவரை வீச தீப்தி ஷர்மா வீசினார் எமி அடித்த பந்தை தடுக்க தீப்தி தாவினார் அப்பொழுது  தற்செயலாக ஹீதர் நைட்டின்  பாதையைத் தடுத்தார் பந்து தீப்தி ஷர்மா கையில் பட்டு பந்து ஸ்டம்பை தாக்கியது . உடனே இந்திய வீரர்கள் ரன் அவுட்டிற்க்கு முறையிட நடுவர்  மூன்றாவது நடுவர்களிடம் நீண்ட கலந்துரையடுளுக்கு பிறகு போட்டியின் நடுவர்  ஹீதருக்கு அவுட் வழங்கினார். 

இதனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனையும் வர்னைனையாளருமான அலெக்ஸ் ஹார்ட்லி இது  தடையாக  இருக்கிறது கூற இது  மார்க் புட்சருக்கு எதிராக இருந்தது.

விதி 41.5 படி “எந்த ஒரு ஃபீல்டர்களும் வார்த்தையாலோ அல்லது செயலலோ , பேட்டிங் செய்பவர்களின் வழியில் வருவது மற்றும் ஸ்ரைக்கர் பந்தை பெற்றவுடன் அவரை ஏமாற்றுவதோ அல்லது தடுப்பதோ நியாயமற்றது.பந்து வீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்கள் இதை எதார்த்தமாக செய்கிறார்களா அல்லது வேணுமென்றே செய்கிறார்களா என்று நடுவர் விசாரிக்க வேண்டும்”

- Advertisement -

இறுதியில்  20 ஒவர் முடிவில்  8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியினால்  140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்டின் ரன் அவுட்டிற்கு பிறகு போட்டி இந்திய அணியின் பக்கம் வந்தது. இப்போட்டியில்  8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் போட்டியை 1-1 என்று சமன் செய்துள்ளது . தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் மூன்றாவது போட்டி வருகிற 14 அன்று நடைபெறவிருக்கிறது.