அர்ஷ்தீப் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அடுத்த நொடியிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்த சர்ஃப்ராஸ் கான் – வீடியோ இணைப்பு

0
113

ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இரண்டு அணிகளான டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நவி மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய உள்ள டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிச்செல் மார்ஷ் 48 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 63 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

போட்டியின் இடையே நடந்த வாக்குவாதம்

டெல்லி அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பின்னர் மார்ஷ் உடன் இணைந்து சர்ஃப்ராஸ் கான் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

ஹர்ப்ரீட் பிரார், ரிஷி தவான் ஆகியோரின் பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து 11 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 26 ரன்கள் குவித்து சிறப்பான நிலையில் அவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

போட்டியின் ஐந்தாவது வரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு கன்வெர்ட் செய்தார். அதன் பின்னர் மூன்றாவது பந்தில் அவர் அடித்த பந்து ராகுல் சஹரை நோக்கிச் சென்றது. கடினமான கேட்ச் என்பதால் அதை அவரால் பிடிக்க முடியவில்லை. பின்னர் அதற்கு அடுத்த பந்தை அடிக்க முயற்சித்த சர்ஃப்ராஸ் கானால் அடிக்க முடியவில்லை. அடுத்த நொடியே சர்ஃப்ராஸ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவருக்கும் வார்த்தைகளால் சிறிய வாக்குவாதம் எழுந்தது.

பின்னர் 5-வது பந்தை மீண்டும் அர்ஷ்தீப் சிங் வீச அதை சர்ஃப்ராஸ் கான் நேராக தூக்கி சிக்சர் அடிக்க முயற்சித்தார். இம்முறை அந்த பந்தை துரத்திச் சென்று ராகுல் சஹர் அற்புதமான கேட்ச் பிடித்தார். 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சர்ஃப்ராஸ் கான் தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை அதிகரிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.