ஆப்கானிஸ்தான் போட்டிக்குப் பிறகு மைதானத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் – வீடியோ இணைப்பு

0
161
Ban vs Afg

நடப்பு 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 முறை ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித் தள்ளி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது!

இந்த நிலையில் நேற்று தொடரின் முதல் சுற்றின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் பங்களாதேஷ் மைதானத்தில் எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மூன்று முறை ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த பங்களாதேஷ் அணியை ஆயாசமாக பில்டிங் மேலும் மேலும் ஆச்சரியத்தை விரிவுப்படுத்தியது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த புற்றுநோய் யோடு போராடும் 75 வயதான குல் பாரி சபி என்ற மூதாட்டி அவரது மகன் கைபர் உடன் போட்டியைக் காண வந்திருந்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வென்ற பிறகு வீல் சேரில் அமர்ந்திருந்த அவர் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபியை பார்க்க விரும்ப, அதற்கு அனுமதி கிடைத்தது. மைதானத்திற்குள் வீல்சேரில் தன் மகனுடன் வந்த அவர் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபியை உச்சிமுகர்ந்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. முகமது நபியைப் பற்றி அந்த மூதாட்டி கூறும் பொழுது ” முகமது நபி சிறந்த வீரர் மற்றும் மிகவும் அடக்கமான மனிதர்” என்று தெரிவித்திருந்தார். இதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின்பு ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி கூறும்பொழுது ” சார்ஜா ஆடுகளம் புதியது. அவர்கள் முதலில் பேட் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தால் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. சார்ஜா மைதானம் எப்பொழுதும் 200 ரன்களை அடிக்கும் மைதானம் கிடையாது. சில நேரங்களில் குறைந்த ரன் போட்டிகளும் அமையும். எங்கள் அணியின் கீழ் வரிசையில் நல்ல பவர் ஹிட்டர்கள் இருக்கிறார்கள். இதனால் நாங்கள் முதலில் விக்கெட்டுகளை தக்க வைத்து, கடைசியில் தாக்கி ஆடி ஆட்டத்தை முடிப்பது என்று முடிவு செய்து அதன் படியே விளையாடி வெற்றி பெற்றோம் ” என்று தெரிவித்து இருக்கிறார்!