“இந்திய அணியின் கேப்டனாக இவர்தான் சரியாக இருப்பார்!” – ரஷித் கான் பரபரப்பு பேட்டி!

0
941
Rashid khan

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ‘ரஷித் கான்’ இந்த இந்திய வீரர் தான், ‘ரோகித் சர்மா’விற்கு  அடுத்து  இந்திய அணியின் டி20 ‘கேப்டனா’க  வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

ஆப்கானிஸ்தான் மற்றும் ‘குஜராத்  டைட்டன்ஸ்’ அணியின் நட்சத்திர வீரர் ‘ரஷித் கான்’ இவர்  இந்திய அணியின் நட்சத்திர  ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்டியா தான்  ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக வரவேண்டும் என்று  தனது கருத்தை பதிவு செய்துள்ளார். “நான்   ஹர்திக் பாண்டியாவின் தலைமையில்  ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணியில் விளையாடிய போது கேப்டன் ‘ஹர்திக் பாண்டியா’  அணியை சிறப்பாக வழி நடத்தினார்  அவரின் தலைமை பண்பும் ஆட்ட நுணுக்கங்களும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டால் திறமையாக செயல்படுவார்” என்று கூறினார்

இதுகுறித்து மேலும் பேசிய ரஷித் கான் ”  குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை கேப்டனாக நான் இருந்தபோது ஹர்திக் பாண்டியாவிடம் போட்டியின் ஆட்ட நுணுக்கங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி  விவாதிப்பேன். அப்போது அவரது தலைமை பண்பில் இருந்து  நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.அவர் அணியை  வழிநடத்தும் விதம் அசாத்தியமானது, தன்னை முன்னிறுத்தி அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியாவின் ‘கேப்டன்சி’ ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஐபிஎல் இல் சிறப்பாக செயல்பட்டு  குஜராத் டைட்டன்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம்   வெல்ல உதவியது போல் இந்திய அணி சிறப்பாக செயல்பட  நிச்சயமாக உதவுவார், எனினும்  இந்திய அணியின் கேப்டனாக  யார் வரவேண்டும் என்ற முடிவு ‘பிசிசிஐ’  இன் கையில்தான் உள்ளது”என்று கூறினார் .

ஹர்திக் பாண்டியா 2022 ஆம் வருட ஐபிஎல் போட்டியில் ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணிக்காக  கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார் அவரது தலைமையில்  குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்டனாக மட்டுமல்லாமல் ‘பேட்டிங்’  மற்றும் பவுலிங்  இரண்டு துறைகளிலும் சிறப்பாக  செயல்பட்டு  அணியை முன் நின்று வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .