#Breaking:இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் இவர்தான்-பிசிசிஐ பரபரப்பு தகவல்

0
8459

இந்திய அணி தற்போது  நியூசிலாந்து அணியுடன் ஆன  ஒரு நாள் போட்டி தொடர்களில் ஆடி வருகிறது. இந்த தொடர்களுக்கான முதல் போட்டி  நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது இந்தப் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான  இரண்டாவது கிரிக்கெட் போட்டி  நாளை மறுநாள் ராய்ப்பூரில் நடக்க இருக்கிறது. இந்த வருட இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பு இருப்பதால் தற்போது இந்திய அணியினர் ஒரு நாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்த வருட உலக கோப்பையில் ஆடுவதற்காக  20 பேர் கொண்ட  முன்னோட்ட அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் இருக்கக்கூடிய வீரர்களுக்கே சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு  ஆட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இருப்பார் என  பிசிசிஐ யின்  மேல்மட்ட அதிகாரி ஒருவர்  கிரிக்கெட் நெக்ஸ்ட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள அவர்  “இந்த வருட உலக கோப்பைக்கு பிறகு  ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக இருப்பாரா என்று தெரியாது. அதனால்  அணிக்கான எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலையும் இப்பொழுதே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. மேலும் கார்த்திக் பாண்டியா சிறந்த கேப்டனாக தன்னை முன்னேற்றி வருகிறார்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் தற்போது இருக்கும்  இந்திய வீரர்களில் ஹர்திக் பாண்டியா சிறந்த தலைமை பண்பு உள்ள வீரராக இருக்கிறார் . மேலும் அவர் சிறந்த கிரிக்கெட் ஆடி வருகிறார். இன்னும் அனுபவம்  அதிகரிக்கும் போது அவர் ஒரு சிறந்த கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார்”என்று கூறினார்.

மேலும் 50 ஓவர்களுக்கான  இந்திய அணியின் எதிர்காலம் பற்றி பேசுகையில் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் பிசிசிஐ  ஹர்திக் பாண்டியாவை தான் கேப்டனாக பார்க்கிறது. ரோகித் சர்மா 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு  கேப்டன் பதவியில் நீடிக்கலாம்  அல்லது அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் . அந்த சமயங்களில் நாம்  எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவதை விட இப்போதே  பிசிசிஐ எதிர்காலத்திற்கான திட்டங்களுடன்  செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா  கடந்தாண்டு ஐபிஎல் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு  கேப்டனாக பொறுப்பேற்று  அந்த அணியை வெற்றி பெறச் செய்தார். மேலும் எட்டு டி20 போட்டிகளுக்கு கேப்டனாக  இருந்து  அவற்றில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முந்தைய தொடர்களில்  கே எல் ராகுல் தான் இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இலங்கை அணியுடன் ஆன தொடரின் போது  ஹர்திக் பாண்டியாவை  துணை கேப்டனாக பிசிசிஐ  நியமித்தது குறிப்பிடத்தக்கது.