மனம் உடைந்து போயிருந்த எனக்கு அவர்தான் நம்பிக்கை அளித்தார் – ஹர்திக் பாண்டியா தனக்கு செய்த நன்மையை வெளிப்படையாக கூறிய சஹா

0
87

கடந்த ஒன்றரை வருடங்களாக சஹா நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். இந்திய அணியில் ரிஷப் பண்ட் வந்த பிறகு இவருக்காண வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. டொமெஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்கால் அணிக்காக விளையாடி வந்த இவரது நேர்மை குறித்து ஒரு சில கேள்விகள் மற்றும் கமெண்ட்டுகள் எடுத்து வைக்கப்பட்டன. அது இன்னும் இவரை அதிக அளவில் காயப்படுத்தியது. அதன் காரணமாகவே இனி பெங்கால் அனுப்பி தான் விளையாட போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அவர் கூறியிருந்தார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் முதல் நாளன்று இவர் எந்த அணி மூலமாகவும் கைப்பற்றப் படவில்லை. ஏலத்தின் இரண்டாவது நாள் குஜராத் அணி இதுவரை ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு கைப்பற்றியது. இருப்பினும் ஆரம்பத்தில் ஐந்து போட்டிகளில் இவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்

முதலில் குஜராத் அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மேத்யூ வேட் ஓபனிங் வீரராக களமிறங்கினார். முதல் ஐந்து போட்டிகளில் எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் ஹர்திக் பாண்டியா என்னிடம் வந்து ஓபனிங் வீரராக விளையாட வேண்டும் என்று கூறினார்.

உடைந்து போயிருந்த எனக்கு அது உத்வேகத்தை அளித்தது. அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். எங்கள் அணிக்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையப் பெறவில்லை எனவே என்னுடைய பணி முடிந்த அளவு ஒரு நல்ல அதிரடி துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே. ஹர்திக் பாண்டியா என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹர்திக் பாண்டியா குறித்து சஹா பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஒரு கேப்டனாக அவர் சிறப்பாக செயல்படுகிறார்

ஹர்திக் பாண்டியா இதற்கு முன்னர் இருந்ததை விட நிறைய மாறி இருக்கிறார். அவரிடம் நிறைய பொறுமை இருக்கிறது. வீரர்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் அவரிடமிருந்து எவ்வாறு ஆட்டத்தை பெறவேண்டும் என்பதில் நல்ல நிலைபாட்டில் இருக்கிறார். வீரர்கள் தவறு செய்தாலும் ஒரு பொழுதும் அவர் தன்னுடைய கோபத்தை அந்தந்த வீரர்களிடம் வெளிப்படுத்தியதில்லை.

அனைவரிடமும் அன்பாக பேசுகிறார், அனைவரையும் அன்பாக உபசரிக்கிறார். எங்கள் அணியில் இருந்த அனைவரும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து அதன் காரணமாகவே எங்களால் கோப்பையை கைப்பற்ற முடிந்தது என்று இறுதியாக சஹா கூறி முடித்தார்.