“ஆட்டத்தை மாற்றிய நாயகன் அவர்தான்” – ஆட்ட நாயகன் விருதின் போது சக வீரரை புகழ்ந்த ஆடம் ஜாம்பா!

0
392

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சென்னையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் பந்து வீச வந்த ஆதம் ஜாம்பா மிகச் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆட்டக நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஜாம்பா. நேற்றைய போட்டியில் 10 ஓவர்களை வீசிய ஜாம்பா 45 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கில் ,கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய இவர் ” நான் இங்கு சில வெற்றிகரமான நினைவுகளை கொண்டிருந்தாலும் இந்திய சூழல்களில் ஆடுவது என்பது ஒரு கடினமான ஒன்று. எப்பொழுதும் ஆட்டத்தில் இருந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது குறிக்கோளாக கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு அணியாக இணைந்து மிகத் திறமையாக செயல்பட்டோம். பந்துவீச்சில் ஒருவருக்கொருவர் உதவும் வகை இணைந்து செயல்பட்டது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பந்துவீச்சாளர்களாகிய நாங்கள் ஒருவர் மற்றொருவரின் மீது நம்பிக்கை வைத்து அணியாக இணைந்து பந்து வீசினோம்” என்று தெரிவித்தார்.

மேலும் தங்களது வெற்றி பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” ஆஸ்டன் ஏகர் இவர்தான் ஆட்டத்தை மாற்றியவர் . போட்டியின் உண்மையான கதாநாயகன் எனக் கூறினார். முக்கியமான தருணத்தில் கண்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுப்பாடாக பந்து வீசியதோடு நன்றாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலியின் விக்கெட்டையும் அணிக்காக எடுத்துக் கொடுத்தார். ஆட்டத்தை மாற்றிய நாயகன் அவர் தான் என தெரிவித்தார் ஆதம் ஜாம்பா. ஆஸ்திரேலியா அணி கடந்த 2019 ஆம் ஆண்டும் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இழந்திருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஏற்பட்ட சரிவினால் ஐசிசி தரவரிசையிலும் இந்தியா முதலிடத்திலிருந்து பின்னடைவை சந்தித்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. தொடர் வெற்றிகள் மூலம் ஆஸ்திரேலியா அணி தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் வகிக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் மிச்சல் மார்ஸ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.