“நீங்க அவரை மறந்திடக் கூடாதுன்னு அவர் எல்லாத்தையும் செஞ்சிருக்காரு” – இந்திய வீரர் குறித்து இர்பான் பதான் மாஸ் விளக்கம்!

0
1930
Irfan Pathan

இந்திய அணி நிர்வாகம் இந்த ஆண்டு உள்நாட்டில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான சரியான இந்திய அணியைக் கண்டறிய பரிசோதனை முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறது!

இந்த பரிசோதனை முயற்சிகளுக்கு முதல் தொடராக இந்திய அணி இலங்கை அணி உடன் உள்நாட்டில் மோதும் ஒரு நாள் தொடர் அமைந்திருக்கிறது. இந்தத் தொடரில் முதலில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பின்பு காயம் சரியாக குணமாகாத காரணத்தால் அணியிலிருந்து விலக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக ஒரு நாள் கிரிக்கெட் முகமது சிராஜ், முகமது சமி, உம்ரான் மாலிக், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்று வருகிறார்கள். நாளை காயம் குணமடைந்து பும்ரா அணிக்குள் வரும்பொழுது இதில் யார் வெளியேறுவார்கள் என்பது ஒரு கேள்விக்குறி!

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் கூறும் பொழுது ” 50 ஓவர் உலகக் கோப்பைக்கான பார்வையில், முகமது சிராஜ் தொடர்ந்து விளையாடுவதால் தனது பெயரை யாரும் மறந்து விடக் கூடாது என்கின்ற அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு உள்ளார். இந்த இலங்கை தொடரில் மட்டுமல்லாது அவர் ஒவ்வொரு போட்டியிலும் புதிய சாதனைகளை வழங்குவதை நீங்கள் பார்க்கலாம். இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அது நடக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” அவர் பந்தை இருபுறமும் நகர்த்துகிறார் அத்தோடு வேகமாகவும் வீசுகிறார். அவர் தனது நிலையைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வருகிறார். அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இந்திய டி20 அணியிலும் இடம் பெற அவர் முயற்சிப்பார். அவர் தொடர்ந்து விளையாடுவதன் மூலம் சிறப்பான செயல்திறனை பெற்றுள்ளார். குறுகிய வடிவத்தில் அவரது செயல் திறன் அதிகரித்து வருவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் அணி நிர்வாகம் அவரை ஐம்பது ஓவர் உலகக் கோப்பை வீரராக மட்டுமே தற்பொழுது பார்க்கும்!” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

50 ஓவர் உலகக் கோப்பைக்கான வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி கூறும் பொழுது ” தற்போதைய பார்ம் அடிப்படையில் வேகப்பந்துவீச்சாளர்களில் உலகக் கோப்பைக்கு முதலில் எழுதப்படும் வீரரின் பெயர் முகமது சிராஜ் பெயராகத்தான் இருக்கும். இவருக்கு பிறகுதான் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் வருவார்கள்” என்று ஆணித்தரமாகத் தெரிவித்து இருக்கிறார்!