இம்ரான் கானிடம் இருந்த பண்பு அப்படியே இந்த வீரரிடம் உள்ளது – லாகூர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிப் ஜாவத் பாராட்டு

0
52
Imran Khan and Aaqib Javed

இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் லாகூர் மற்றும் முல்தான் அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஷாஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வரலாற்றில் முதல் முறையாக லாகூர் அணி பிஎஸ்எல் கோப்பையை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அவரிடம் நேர்மையும் அர்ப்பணிப்பும் அதிகமாக இருக்கிறது

லாகூர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகிப் ஜாவத் சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், பிளே ஆஃப் சுற்று நடந்து கொண்டிருக்கையில் எனக்கு கொரனோ உறுதியானது.

அதன் காரணமாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன். நான் அணி வீரர்களுடன் இல்லாத போதிலும் அவர்கள் மிக சிறப்பாக விளையாடி இறுதி வரை முன்னேறி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினார்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அணியின் சப்போர்ட் ஊழியர்கள், அணி வீரர்கள் முக்கியமாக கேப்டன் ஷாஹீன் அப்ரிடிக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

லாகூர் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி முதல் கோப்பையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுத் தந்திருக்கிறார். விளையாட்டின் மீதான நேர்மையும் அர்ப்பணிப்பும் அவரிடம் அதிக அளவில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் ஒரு கேப்டனாக அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது இயற்கையாகவே அவருக்கு தெரிந்திருக்கிறது என்று அவரை பாராட்டி உள்ளார்.

இம்ரான் கானிடம் இதையே நான் தெரிவித்தேன்

சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து நான் நிறைய விஷயங்களை பேசினேன். அப்பொழுது அவரிடம் உங்களிடம் இருந்த அர்ப்பணிப்பும் நேர்மையும் அப்படியே தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியிடம் உள்ளது என்று கூறினேன்.

மேலும் வருங்காலத்தில் பாகிஸ்தான் அணியை வழி நடத்தக்கூடிய அனைத்து தகுதியும் திறமையும் அவரிடம் உள்ளது என்றும் நம் அனைவரையும் அவர் பெருமை அடையச் செய்வார் என்றும் இம்ரான் கானிடம் கூறியதாக ஆகிப் ஜாவத் தற்பொழுது கூறியுள்ளார்.

21 வயதான ஷாஹீன் அப்ரிடி இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 88 விக்கெட்டுகளையும், 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளையும், 39 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 45 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.