தொடரும் விராட் கோலியின் மோசமான ஆட்டம் ; அறிவுரை அளிக்கும் ஏபி டிவில்லியர்ஸ்

0
263
Ab de Villiers about Virat Kohli

கடந்த சில வருடங்களில் விராட் கோலி சர்வதேசப் போட்டியிலும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி முன்பு போல அதிரடியாக விளையாடுவதில்லை. குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிக சுமாராகவே விளையாடி வருகிறார். 10 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள அவர் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இதில் இரண்டு போட்டிகளில் அவர் கோல்டன் டக் ஆனது குறிப்பிடத்தக்கது.

10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியை மட்டும் அரை சதம் அடித்துள்ளார். அந்த போட்டியிலும் 53 பந்துகளில் 58 ரன்கள் குவித்து மிக மெதுவாகவே அவர் விளையாடினார். நிறைய பந்துகளை பிடித்து அவர் மெதுவாக விளையாட மற்ற பேட்ஸ்மேன்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தினார். விராட் கோலி தற்போது மோசமான பாருங்கள் உள்ளதால் அவர் குறித்து ரசிகர்கள் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
ஓவர் நைட்டில் ஒரு வீரர் மோசமான வீரராக விட முடியாது – ஏபிடி

விராட் கோலியின் நண்பரும் அவருடைய பார்ட்னர் ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து பெங்களூரு அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்த கதை நமக்கு நன்றாக தெரியும்.
இந்நிலையில் தற்போது அவர் விராட் கோலியை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“ஓவர்நைட்டில் ஒரு வீரர் மோசமான வீரராகிவிட முடியாது. இது எனக்கு தெரியும் அதே போல விராட் கோலிக்கும் தெரியும். எந்த ஒரு வீரரும் மோசமான பார்மில் தொடர்ச்சியாக இருந்துவிட முடியாது. அந்த மோசமான பார்ம் உடைய ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவை.

அது எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். 2-3 இன்னிங்ஸ்சில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் மோசமான பார்மிலிருந்து எழுந்து வரலாம். அதற்கு நம்முடைய உடல் வலிமையை விட மன வலிமை மிக முக்கியம். இரண்டும் நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி எங்கு விளையாடினாலும் எப்பொழுது விளையாடினாலும் புத்துணர்ச்சியுடன் ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அப்படி எதிர் கொள்ளும் பட்சத்தில் நிச்சயமாக நம்மால் நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

- Advertisement -

விராட் கோலிக்கு இவையெல்லாம் நன்றாகத் தெரியும். மீண்டும் அவர் தன்னுடைய பழைய பார்மில் கூடிய விரைவில் விளையாடத் தொடங்குவார். இவ்வாறு விராட் கோலி குறித்து ஏபிடி வில்லியர்ஸ் தற்பொழுது கூறியுள்ளார்.

10 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி கண்டுள்ள பெங்களூரு அணி இன்று அதனுடைய அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.