2022 ஐபிஎல் தொடரில் ரன்களை வாரிக் கொடுத்த சிராஜ் – அவரின் மோசமான ஆட்டம் குறித்து மௌனம் களைத்த மைக் ஹெஸ்சன்

0
104
Mike Hesson about Mohammad Siraj

2022 ஐபிஎலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குவாலிபயர் 2 சுற்று வரை முன்னேறியது. டெல்லி அணிக்கு எதிராக மும்பை பெற்றதன் மூலம் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பின்னர் எலிமினேட்டர் போட்டியில் பலம் வாய்ந்த லக்னோ அணியை வீழ்த்தி அடுத்த போட்டிக்கும் சென்றது. இறுதிப் போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை முடிவு செய்யும் போட்டியாக குவாலிபயர் 2இல் பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 157/8 என முடித்தது. பட்லரின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி எளிதாக வென்றது.

அடித்தது குறைந்த ஸ்கோர் தான். ஆகையால் அதைக் கட்டுப்படுத்த பவர்ப்பிளேவில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பதை தடுக்க வேண்டும். இதை இரண்டுமே பெங்களூர் அணி செய்யத் தவறியது. அதனால் போட்டியில் தோல்வியை தழுவியது. ஆர்.சி.பி அணியின் பந்துவீச்சை மொஹமத் சிராஜ் துவங்கினார். முதல் 2 ஓவரிலேயே 31 ரன்களை வாரி வழங்கினார். இரண்டு பிளே ஆப் போட்டிகளில் 6 ஓவர்கள் பந்துவீசி 75 ரன்கள் விட்டுக் கொடுத்து வெறும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்தியுள்ளார் சிராஜ். அது மட்டுமில்லாமல் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்த வீரர் ( 31 ) என்ற மோசமான சாதனையையும் தன் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொண்டார்.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே அவரது மோசமான பார்மில் இருந்தார். இது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இயக்குனர் மைக் ஹெஸ்சன் கருத்து தெரிவித்துள்ளார். “ சிராஜ் சிறப்பான பவுலர் தான். இந்த தொடர் அவருக்கு நன்றாக அமையவில்லை அவ்வளவு தான். நிச்சயம் அவர் மீண்டு வருவார். புதுப் பந்தில் அவர் விக்கெட்டுகள் எடுக்கத் தவறினார். அவர் வீசிய பந்துகள் ஸ்விங் ஆகவில்லை. அதனால் அவர் தன்னம்பிக்கையை இழந்து காணப்பட்டார். ” என்றார்.

2022 ஐபிஎல் தொடரில் மொஹமத் சிராஜ், 15 போட்டிகளில் 10.08 எனும் மோசமான எக்கானமியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்ற ஆண்டு வெறும் 6.78 எக்கானமியில் பந்துவீசி ஆதிக்கம் செலுத்திய சிராஜ் தன் செல்லும் கடினமான பாதையில் இருந்து மீண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நிச்சயம் அவர் அதைச் செய்வார் என நம்புவோம். சிராஜின் சிறப்பான ஆட்டம் பெங்களூர் அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கு தேவை.