பண்ட் இல்லாத குறைய தீக்க சரியான ஆளு, இவர்தான் – முன்னாள் இந்திய வீரர் பேட்டி!

0
176

ரிஷப் பன்ட் இல்லாத இடத்தை நிரப்ப சரியான வீரர் இஷான் கிஷன் என்று முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30ம் தேதி டெல்லியில் இருந்து சொந்த ஊரான ரூர்க்கி சென்று கொண்டிருந்த ரிஷப் பண்ட் கார் சாலையில் விபத்திற்கு உள்ளானது. இதனால் படுக்காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட ஊர் மக்கள் சிலர் உடனடியாக காப்பாற்றி ஆம்புலன்ஸ் வர வைத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தலையில், கால் மற்றும் கை பகுதிகளில் அடிபட்டிருந்த பண்ட்-க்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பலருக்கு நிம்மதி பெருமூச்சானது.

தலையில் வெட்டு காயங்கள் இருக்கின்றன. அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கால் பகுதியில் எலும்பு முறிவு மற்றும் ஜவ்வு கிழிந்துள்ளது இதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். முழுமையாக குணமடைய குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். அதுவரை அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என தெரிவித்தனர்.

இதனால் யார் ரிஷப் பண்ட் இடத்தை தற்காலிகமாக நிரப்புவார் என கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் மணிந்தர் சிங் பதில் கூறியிருக்கிறார்.

“ரிஷப் பண்ட் இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தை நிரப்புவதற்கு சரியான வீரர் இஷான் கிஷன். அவரைப்போலவே இடது கை பேட்ஸ்மேன் மற்றும் அதிரடியாக விளையாட கூடியவர். மூன்றுவித போட்டிகளிலும் இவரை விளையாட வைக்கலாம். ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையான கீப்பிங்கை நிரூபித்திருக்கிறார். ஆகையால் அவருக்கு அப்படியே சரியான வீரர் இஷான் கிஷன் மட்டுமே.

இந்திய அணியின் தேர்வு குழுவினர் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனது கருத்தின்படி ரிஷப் பண்ட் போலவே திறமையை கொண்டிருப்பவர் இஷான் கிஷன். அதீத திறமைகளை வைத்திருக்கிறார். இளம் வீரராகவும் இருக்கிறார் ஆகையால் இவரை எடுக்கலாம் டெஸ்ட் போட்டிகள் உட்பட மூன்றுவித போட்டிகளிலும் விளையாட வைக்கலாம்.” என்றார்.

ரஞ்சிகோப்பை தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷன், இந்த ஆண்டு நடந்த தொடரில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல் வங்கதேசம் அணியுடன் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிறப்பாக விளையாடிய 131 பந்துகளில் 210 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். சர்வதேச போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்று பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

தன் வசம் இப்படி சிறப்பான சாதனையை வைத்திருக்கும் இவருக்கு மூன்று வித போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல்கள் வலுக்கின்றன. அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.