என்னைப் பொறுத்தவரை உலகின் நம்பர் 1 பவுலர் இவர்தான் – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்

0
3905
Babar Azam

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாடுவதை, உலக பெரிய கிரிக்கெட் நாடுகள் தவிர்த்து வந்த நிலையில், கடந்த மாதங்களில் பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்து, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், ஒரே ஒரு ட்வென்டி ட்வென்டி போட்டிகளென மூன்று தொடர்களில் விளையாடியது!

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என்று ஆஸ்திரேலியா வெல்ல, ஒருநாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் வென்றது. இதில் இரண்டு சதங்களை கேப்டன் பாபர் ஆஸம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டி கொண்ட ட்வென்டி ட்வென்டி தொடரை ஆஸ்திரேலியா வென்றது.

இதுக்குறித்தெல்லாம் பேசியுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம் “உலக கிரிக்கெட் நாடுகள் இங்கு கிரிக்கெட் விளையாட வருவது அற்புதமான விசயம். ஆஸ்திரேலியா இங்கு களத்தில் அனுபவித்து கிரிக்கெட்டை விளையாடினார்கள். மூன்று வடிவ கிரிக்கெட் தொடரும் மிகச்சிறப்பாக அமைந்தது” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஷாகின்-ஷா அப்பிரிடி மூன்று வடிவ கிரிக்கெட்டிற்காகவும் கடினமாக உழைக்கிறார். ஆஸ்திரேலியா இங்கு வந்திருந்தபோது எல்லா ஆட்டங்களிலும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். எனக்கு அவர்தான் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர். அவரும் தரவரிசையில் முதலிடத்திற்கு வருவதற்கு நிச்சயம் கடுமையாகப் போராடுவார்” என்றார்!