இவர்தான் அடுத்த விராட் கோலி – இங்கிலாந்து கேப்டன் பரபரப்பு கருத்து!

0
588
Viratkohli

டி20 உலக கோப்பைக்கு முன்பாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இங்கிலாந்து அணி 17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து தொடரை 4-3 என வென்றது!

இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் பெரிதாக பங்கேற்கவில்லை. கேப்டன் பட்லரும் காயத்தால் விளையாடவில்லை. இந்த நிலையில் இளம் வீரர்களான டக்கெட் மற்றும் ஹாரி புருக்ஸ் இருவரும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்கள்!

டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தது மீண்டும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தான் வந்துள்ளது!

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சமீபமாக விளையாடி வரும் தாக்குதல் பாணியில் விளையாடி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக டிக்ளரும் செய்து பாகிஸ்தான் அணியை ஐந்தாவது நாளில் அட்டகாசமாக வீழ்த்தியது!

இதற்கு அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி சுலபந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்து புதிய மர்ம சுழற் பந்துவீச்சாளரை கொண்டு வந்து அசத்தியது. ஆனாலும் இங்கிலாந்து அணி தனது தாக்குதல் பாணியை மாற்றிக் கொள்ளாமல் விளையாடி முதல் இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்று. நான்காவது இன்னிங்ஸில் மீண்டும் மிகச் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது!

இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஹாரி புரூக்ஸ் , இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். அவரது இந்தச் சதம் இங்கிலாந்து அணி வெற்றி பெற மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சமீபமாக உலக கிரிக்கெட்டில் கவனிக்கப்பட வேண்டிய இளம் வீரராக உருவாகி வருகிறார் இவர்!

இவர் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் கூறும்போது ” ஹாரி கடந்த ஆண்டு கோடைகாலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாவதற்கு முன்பு மிகப்பெரிய விளையாட்டுகளை விளையாடி அசத்தியிருந்தார். இங்கு வந்து மீண்டும் அதே போல் அவர் அசத்தியது சிறப்பானது. நீங்கள் பார்க்கும் அரிய வீரர்களில் அவரும் ஒருவர். எல்லா வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் எல்லா இடங்களிலும் அவர் வெற்றி பெறுவதை நீங்கள் பார்க்கலாம். விராட் கோலியின் பேட்டிங் நுட்பம் மிக எளிமையானது அது எங்கும் வேலை செய்யக் கூடியது. இவரும் அவரைப் போல ஒருவர் தான்!” என்று தெரிவித்துள்ளார்!