உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான் – இளம் வீரரை பாராட்டியுள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

0
389

கடந்த ஆண்டு நடந்த முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜோஸ் பட்லர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. கடைசி 6 இன்னிங்ஸ்களில் அவர் 45 ரன்கள் மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு முறை டக் அவுட் அவர் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்த முடிந்த டெஸ்ட் தொடரில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக பென் ஃபோக்ஸ் அணிக்குள் வந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாகவே அவர் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தனது திறமையை நிரூபித்தார். அதற்கு கிடைத்த பரிசாக தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

முக்கிய கட்டத்தில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ்

நியூசிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ் சிறப்பாக ஐந்து கேட்சுகளை எடுத்தார். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்சில் மிக சிறப்பாக ஜோ ரூட்டுக்கு துணையாக விளையாடினார்.

மூன்றாவது நாளில் கடைசி செசனில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 159 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி அப்பொழுது 5 விக்கெட்டை பறிகொடுத்து சற்று இக்கட்டான நிலையில் இருந்தது.

- Advertisement -

பின்னர் வந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 15 ஓவர்கள் தனது விக்கெட்டை விடாமல் ஜோர்ஜ் உடன் இணைந்து மிக சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமின்றி நான்காவது நாள் ஆட்டத்திலும் அவருடன் இணைந்து மிக சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

159/5 என்ற நிலையிலிருந்து எந்தவித விக்கெட்டையும் விடாமல், 279 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தார். அவருக்குத் துணையாக விளையாடிய பென் ஃபோக்ஸ் 32* குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாராட்டித் தள்ளிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

கவுண்டி தொடரில் அவர் சற்று மேல் இறங்கி விளையாடுவார் ஆனால் நியூசிலாந்து அணிக்காக அவர் ஏழாவது வீரராக வந்து விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் அற்புதமாக தன்னுடைய ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

10 கேட்சுகளில் 9 கேட்சுகள் எடுக்கும் அளவுக்கு அவரிடம் திறமை உண்டு. என்னைப் பொறுத்தவரையில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அவர்தான். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது என்று வெகுவாக பென் ஃபோக்ஸ்சை பாராட்டியுள்ளார்.