இந்திய அணியில் டாப் ஃபோரில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் – முன்னனி வீரருக்கு வாசிம் ஜாபர் அறிவுரை

0
23

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலாக நடந்துமுடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

ட்வைன் பிரிட்டோரியஸ் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்து வீச்சாளராக சிரமப்படுவதாகவும், அதில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை கொடுத்துள்ளார்.

நிச்சயமாக அவர் இதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் – வாசிம் ஜாபர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிரமப்ப்பட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 130 ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டிருந்தார் மற்றும் ஆறு முறை அவர்களுக்கு எதிராக ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் 138.06 ஆக மட்டுமே இருந்தது மற்றும் ஏழு முறை அவர்களுக்கு எதிராக அவர் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது

இந்திய அணியில் டாப் போர் வீரர்களில் ஒருவராக அவர் விளையாடிக் கொண்டிருக்கும் பட்சத்தில் இதுபோன்று அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிரமப்படுவது அழகல்ல என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவர் சற்று பயந்து கிரீஸில் நகர்ந்து விடுகிறார். ஆஃப் சைடு பக்கமாகவே அடிக்க முயற்சிக்கிறார். ஷார்ட் பந்துகளுக்கு எதிராக அவரது ஆட்டம் சுமாராக இருக்கிறது. நிறைய ஷாட்களை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவர் ஆட வேண்டும். பின்னாடி வந்து விளையாடி போகும் வீரர் அவரல்ல. டாப் போரில் ஒருவராக விளையாடி கொண்டிருக்கிறார்.

எனவே அவர் இன்னும் சற்று கவனம் செலுத்தி இதை சரி செய்ய வேண்டும்.இதை சரி செய்து விளையாடும் பட்சத்தில் இன்னும் 15-20 ரன்கள் கூடதலாக அவரால் அடிக்க முடியும் என்று வாசிம் ஜாபர் அறிவுறை கூறியுள்ளார்.