“இவர் அணிக்காக முன்னாடி நிற்கிறார்!” – தினேஷ் கார்த்திக் பரபரப்பான பேச்சு!

0
1039
DK

இந்தியாவின் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு  அவர்கள் நியூசிலாந்தில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம்  இந்திய அணி எதிர்பார்த்த வகையில் அமையவில்லை,இருந்தாலும் தொடரை வெற்றி பெற்றது இந்திய அணிக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது.இந்த வெற்றியின் மூலம் ‘ஹர்திக் பாண்டியா’ சர்வதேச அளவில் தோல்விகளை சந்திக்காத கேப்டனாக இருந்து கொண்டிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான ‘டி20’ தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில்  ‘ஹர்திக் பாண்டியா’ தான் இந்திய வருங்கால டி20 அணியின் கேப்டனாக இருப்பாரா?என்று கேள்வி எழுந்துள்ளது . இதுகுறித்து பல்வேறு தரப்பினரும்,பல்வேறு கேள்விகளையும் தங்களுடைய கணிப்புகளையும் கூறிவரும் நிலையில்  இந்திய அணியின்  ‘ஃபினிஷரும்’  ‘விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனு’ம்  தற்போது வர்ணனையாளராகவும்  பணியாற்றி வரும் :தினேஷ் கார்த்திக்’  தன்னுடைய கணிப்பை கூறியுள்ளார் .
இதனைப் பற்றி பேசியுள்ள அவர் ”  இந்திய அணியின் கேப்டனாக இருந்த ‘ரோகித் சர்மா’ மற்றும்  துணை கேப்டன்  ‘கே.எல்.ராகுல்’ ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில்  தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை  ‘ஹர்திக் பாண்டியா’ சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார் .

இதனைப் பற்றி பேசி உள்ள ‘தினேஷ் கார்த்திக்’ ”  ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி  இந்தத் தொடரில் தேர்வாளர்கள் மற்றும் அணி மேலாண்மையின் நம்பிக்கையை பெறும் வகையிலும்  கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் “

நேற்றைய போட்டியின் போது  ஹர்திக் பாண்டியா எடுத்த சில முடிவுகள்  ஆட்டத்தின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தின . நியூசிலாந்து அணி 15 வது ஓவர் வரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில்  ஹர்திக் பாண்டியா பந்திவீச்சில் ஏற்படுத்திய மாற்றம்  இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் வருவதற்கு  காரணமாக அமைந்தது “எனக் குறிப்பிட்டார்.

  மேலும் இந்திய அணியின் பேட்டிங்கின் போது  அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி  இழந்திருந்த நிலையில்  ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்து  ‘கவுண்டர் அட்டாக்கிங்’ செய்த ஆடியது  நேற்றைய போட்டி  ‘DLS’ விதிமுறைகளின் படி  சமநிலை முடிவதற்கு ஒரு காரணமாக இருந்தது .  தனது அணி எந்த மாதிரியான ஒரு ஆட்ட முறையை கையாள வேண்டும்  என்பதற்கு ‘ஹர்திக் பாண்டியா’ தான் முன்னிலையில் இருந்து அணியை வழி நடத்துவதாக கூறினார் .

தினேஷ் கார்த்திக்கின் இந்த கருத்தையே முன்னாள் வீரர்கள் பலரும் ஆமோதிக்கும் விதமாக  பேசியுள்ளனர் . இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும்  முன்னாள் தேர்வு குழு தலைவர் ஆன  ‘கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்’  2024 ஆம் வருடம்,மேற்கு இந்திய தீவுகள்  மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு  ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் கேப்டனாக  நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் .